இலங்கை பொலிஸார் விடயத்தில் ஸ்கொட்லாந்திற்கு அதிகரிக்கும் அழுத்தம்!
ஸ்கொட்லாந்து அரசாங்கம், இலங்கை காவல்துறைக்கான பயிற்சிகள் தொடர்பான மீளாய்வு விபரங்களை வழங்கவேண்டும் என்று சர்வதேச உரிமை அமைப்புகள் கோரியுள்ளன.
மனித உரிமைகள் கண்காணிப்பகம், சித்திரவதையிலிருந்து சுதந்திரம், அமைதி மற்றும் நீதிக்கான இலங்கை பிரசாரம், மற்றும் பொக்ஸ் கிறிஸ்டி ஸ்கொட்லாந்து ஆகிய அமைப்புகள் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஸ்கொட்லாந்தின் நீதித்துறை செயலாளர் கீத் பிரவுனுக்கு எழுதிய கடிதத்தில் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த பயிற்சிகள் இலங்கையின் துஷ்பிரயோகம் செய்யும் காவல்துறையின் நடவடிக்கைகளுக்கு ஒப்புதல் அளிப்பதாகத் தோன்றுகிறது.
எனவே ஸ்கோட்லாந்தின் அமைச்சர்கள் பயிற்சித் திட்டத்தை இடைநிறுத்த தங்கள் அதிகாரத்தைப் பயன்படுத்தவேண்டும் என்றும் உரிமை அமைப்புக்கள் வலியுறுத்தியுள்ளன.
அண்மைய மாதங்களில் இலங்கையின் காவல்துறையினர், சித்திரவதை மற்றும் சட்டத்திற்கு புறம்பான கொலைகளை மேற்கொண்டுள்ளனர்.
2013 ஆம் ஆண்டு முதல் தொடர்ச்சியான அடிப்படையில் ஸ்கொட்லாந்து காவல்துறையின் பயிற்சியை பெற்ற போதிலும், பல ஆண்டுகளாக இதுபோன்ற முறைகேடுகளின் வடிவத்தில், இலங்கையின் காவல்துறையினர் சிக்கியுள்ளனர்.
இந்தநிலையில் இலங்கை அரசாங்கம் காவல்துறையை சீர்திருத்தும் விருப்பத்தை வெளிப்படுத்தும் வரை ஸ்கொட்லாந்து, தனது பயிற்சி திட்டத்தை நிறுத்த வேண்டும் என்று மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் இங்கிலாந்து இயக்குனர் யஸ்மின் அகமது கேட்டுள்ளார்.

உள்ளூராட்சிசபை தேர்தலும் தமிழ் தேசியமும் 9 மணி நேரம் முன்

10-ம் வகுப்பு தேர்வில் கிரிக்கெட் வீரர் விராட் கோலி எடுத்த மதிப்பெண்கள் எவ்வளவு தெரியுமா? News Lankasri
