“ஸ்கொட்லாந்து பொலிஸார் பயிற்சி வழங்குவதனை நிறுத்தியதாக வெளியான தகவல் உண்மையில்லை”
ஸ்கொட்லாந்து பொலிஸார், இலங்கைப் பொலிஸாருக்கு பயிற்சி வழங்குவதனை நிறுத்திக் கொண்டதாக வெளியான தகவல்கள் பொய் என தெரிவிக்கப்படுகின்றது.
பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்தூவ இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
இலங்கைப் பொலிஸாருக்கு ஸ்கொட்லாந்து வழங்கி வந்த பயிற்சிகள் நிறுத்தப்பட்டதாக வெளியான தகவல்களில் உண்மையில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
பயிற்சி இடைநிறுத்தம் குறித்து ஸ்கொட்லாந்து பொலிஸார் இதுவரையில் ஸ்கொட்லாந்து அதிகாரிகள் அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அவ்வாறு பயிற்சி வழங்குவது நிறுத்தப்பட்டிருந்தாலும் அது மனித உரிமை விவகாரங்களினால் ஏற்பட்டிருக்காது எனவும் அது கோவிட் நிலைமைகளினால் இவ்வாறு பயிற்சி வழங்குவது இடைநிறுத்தப்பட்டிருக்கலாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஸ்கொட்லாந்து பொலிஸ் பயிற்சி மட்டுமன்றி ஏனைய பல்வேறு பயிற்சிகளும் இவ்வாறு இடைநிறத்தப்பட்டுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கோவிட் பெருந்தொற்று நிலைமைகளினால் கடந்த ஆண்டு முதல் இலங்கை பொலிஸார் பயிற்சிக்காக ஸ்கொட்லாந்து செல்லவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
பயிற்சி நடவடிக்கைகளை மீள ஆரம்பிப்பது குறித்து ஸ்கொட்லாந்து அதிகாரிகளுடன் இலங்கை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடாத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
எதிர்வரும் ஆண்டு முதல் பயிற்சிகளை ஆரம்பிப்பது குறித்து கடந்த 17ம் திகதி பிரித்தானிய உயர்ஸ்தானிகராலாயத்துடன் பேச்சுவார்த்தை நடாத்தப்பட்டுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, இலங்கை மனித உரிமைகள் நிலைமைகளை கருத்திற் கொண்டு பொலிஸாருக்கு வழங்கப்பட்டு வந்த பயிற்சிகளை இடைநிறுத்திக் கொள்வதாக அண்மையில் ஸ்கொட்லாந்து பொலிஸார் அறிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சிசபை தேர்தலும் தமிழ் தேசியமும் 2 நாட்கள் முன்

நிலாவை காப்பாற்ற சென்ற சோழன் அப்பாவிற்கு ஏற்பட்ட சோகம்.. அய்யனார் துணை அடுத்த வார பரபரப்பு புரொமோ Cineulagam
