பாடசாலைகளில் அனைத்து வகுப்புக்களையும் ஆரம்பித்தல் குறித்து கல்வி அமைச்சின் அறிவிப்பு
இலங்கையில் பாடசாலைகளின் அனைத்து வகுப்புக்களையும் ஆரம்பிப்பது தொடர்பான அறிவிப்பொன்று வெளியாகியுள்ளது.
அதன்படி பாடசாலைகளில் சகல வகுப்புக்களையும் அடுத்த வாரத்தின் பின் ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் தினேஸ் குணவர்தன (Dinesh Gunawardena) கூறியுள்ளார்.
தினேஸ் குணவர்தன நேற்றைய தினம் கண்டியில், மல்வத்து மற்றும் அஸ்கிரிய பீடாதிபதிகளை சந்தித்திருந்தார்.
இதனை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே குறித்த விடயத்தை கூறியுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில், தற்போது மாணவர்களுக்கான தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அத்துடன் பாடசாலைகளில் சுத்திகரித்தல் செயற்பாடுகளும் மேற்கொள்ளப்படுகின்றன.
இந்த நிலையில் நாட்டில் கோவிட் தொற்று பரவல் ஒப்பீட்டளவில் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
எனவே, பாடசாலைகளின் ஏனைய வகுப்புக்களை மீள ஆரம்பிக்கும் தினம் தொடர்பான அறிவித்தல் அடுத்துவரும் நாட்களில் வெளியிடப்படும் என சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்தியாவிலேயே அதிகபட்ச விலை.. துரந்தர் ஓடிடி உரிமை வாங்கிய நெட்பிலிக்ஸ்! புஷ்பா 2 சாதனையை தகர்த்தது Cineulagam
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் பாண்டியனாக நடிக்கும் ஸ்டாலின் முத்துவின் குடும்ப புகைப்படங்கள் Cineulagam
பிரித்தானியாவில் கிறிஸ்துமஸ் தினத்தன்று நிகழ்ந்த சோகம்: கொடூர தாக்குதலில் 80 வயது மூதாட்டி பலி News Lankasri