பாடசாலைகள் நவம்பரில் திறக்கப்படுகின்றதா? கல்வி அமைச்சு தயார் செய்துள்ள திட்டம்
இலங்கையில் பாடசாலைகளை திறப்பதற்கான திட்டத்தைக் கல்வி அமைச்சு ஏற்கனவே தயார் செய்துள்ளதாக தெரியவருகிறது.
பாடசாலைகளை எதிர்வரும் நவம்பர் மாதத்தில் திறக்க ஜனாதிபதி சுகாதார அமைச்சுக்கு யோசனை வழங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அத்துடன், நாடு முழுவதும் பாடசாலைகளைத் திறப்பது குறித்து சுகாதார வழிகாட்டுதல்களை எதிர்வரும் 13ஆம் திகதிக்குள் தயாரிக்குமாறு ஜனாதிபதி சுகாதார அமைச்சுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் விசேட வைத்தியர்கள், தொழிநுட்ப மதிப்பீட்டு முகவர்கள் மற்றும் கல்வி அமைச்சின் உதவியுடன் வழிகாட்டுதல்களை தயாரித்து சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன ஜனாதிபதியிடம் கையளிக்கவுள்ளதாக தெரியவருகிறது.
இதேநேரம், 12 - 18 வயதுடைய மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கையைத் துரிதப்படுத்துமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.
மேலும், க.பொ.த சாதாரணதர முடிவுகளை வெளியிடுவது குறித்து கவனம் செலுத்தப்பட்ட நிலையில் செயன்முறை பரீட்சை இதுவரை நடத்தப்படாததால் முடிவுகள் வெளியிடுவதற்குத் தாமதமாகும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
செயன்முறை பரீட்சைகள் நடத்தப்படாமல் பரீட்சை முடிவுகளை வெளியிட இதன்போது கவனம் செலுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
முதல் நாளிலேயே மாஸ் வசூல் வேட்டை செய்துள்ள பிரதீப்பில் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி... செம கலெக்ஷன் Cineulagam
அடுத்த சில வாரங்களுக்குள்... ஈரானுக்கு சீனாவின் பேருதவி: அமெரிக்க உளவுத்துறை வெளிப்படை News Lankasri
கப்பல்களுக்கு சுங்கக் கட்டணம் வசூலிக்கும் ஈரான்... இந்தியாவிடமிருந்து எவ்வளவு வசூலிக்கிறது? News Lankasri