குற்றச்சாட்டுகளை மறைக்க பாடசாலைகளை மூடி போராட்டம்: இரகசிய ஒலிநாடாவில் அம்பலமான தகவல்
வடக்கு மாகாண கல்வித் திணைக்களத்தின் மீது பல்வேறு தரப்பினராலும் ஊழல் நிர்வாக முறைகேடு தொடர்பான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வரும் நிலையில், பாடசாலைகளை மூடி போராட்டம் ஒன்றை நடத்துவதற்கு மாகாண கல்வி பணிப்பாளர் ஜோன் குயின்ரஸ் அழுத்தம் வழங்கும் இரகசிய திட்டம் தீட்டும் ஒளிநாடா வெளியாகி உள்ளது.
குறித்த விடயம் தொடர்பில் தெரியவருவதாவது,
வடக்கு மாகாணத்தில் உள்ள பாடசாலைகளில் நிர்வாகம் மற்றும் ஊழல் முறைகேடுகள் தொடர்பாக வடக்கு மாகாண கல்வித் திணைக்களம் உரிய முறையில் விசாரணைகள் மேற்கொள்வது இல்லை என இலங்கை ஆசிரியர் சங்கம் மற்றும் இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் உட்பட பல்வேறு தரப்பினர்களும் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகின்றனர்.
இரகசிய திட்டம்
குறித்த குற்றச்சாட்டுகள் தொடர்பில் முன்னணி சமூக ஊடகங்கள், பத்திரிகைகள் மற்றும் சமூக வலைத்தளங்கள் என்பவற்றில் செய்திகள் பரவ ஆரம்பித்துள்ளன.
இவ்வாறான நிலையில், தம்மீது உள்ள குற்றச்சாட்டுகளை மறைப்பதற்காகவும் அது தொடர்பில் எழுதுபவர்கள் மீது அழுத்தங்களை பிரயோகிப்பதற்காகவும் பாடசாலை மாணவர்களை பகடைக்காய்களாக பயன்படுத்தும் இரகசியத் திட்டம் அடங்கிய மாகாணக் கல்வி பணிப்பாளரின் குரல் பதிவு தற்போது வெளியாகியுள்ளது.
இதனையடுத்து, அரச உயர் அதிகாரியாக இருந்து கொண்டு அரச நிர்வாகத்தை குழப்பும் வகையில்
பாடசாலைகளை மூடி மாணவர்களை போராட்டத்துக்கு கட்டாயப்படுத்தும் செயற்பாடு
அம்பலமாகியுள்ளமை பல்வேறு தரப்பினரிடமும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 4 நாட்கள் முன்

சிறுவயதில் முத்துவிற்கு என்ன ஆனது, மனோஜ் என்ன செய்தார்... சிறகடிக்க ஆசை சீரியல் ஷாக்கிங் புரொமோ... Cineulagam

ஈஸ்வரிக்கு ஆபத்து.. திருமண பிரச்சனைக்கு நடுவில் அடுத்த ஷாக்! எதிர்நீச்சல் தொடர்கிறது ப்ரோமோ Cineulagam

6 நாள் முடிவில் சிவகார்த்திகேயனின் மதராஸி திரைப்படம் தமிழகத்தில் செய்துள்ள வசூல் எவ்வளவு தெரியுமா? Cineulagam
