கந்தளாய் வலயக்கல்வி அலுவலக பிரிவுக்குட்பட்ட பாடசாலைகளுக்கு விடுமுறை
திருகோணமலை - கந்தளாய் வலயக்கல்வி அலுவலக பிரிவுக்குட்பட்ட பாடசாலைகள் அனைத்தும் நாளை(29) முதல் ஜூலை 10ஆம் திகதி வரையும் மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
வலயக்கல்விப் பணிப்பாளர்களுக்கும், கிழக்கு மாகாண கல்வி பணிப்பாளர்களுக்கும் இடையில் இன்று(28) சூம் ஊடாக நடைபெற்ற கலந்துரையாடலிலேயே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சுகாதாரம் , துறைமுகம் , உணவு சேவை போக்குவரத்து உட்பட்ட அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரமே இன்று நள்ளிரவு முதல் ஜூலை 10 ஆம் திகதி வரை எரிபொருள் விநியோகம் இடம்பெறும் என நேற்று அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்டிருந்தது.

கிராமப்புற பாடசாலைகள் போக்குவரத்து வசதிகளுக்கேற்ப இயங்கும்
அத்தோடு, நகர்ப்புற பாடசாலைகள் ஜூலை 10 வரை மூடப்பட்டாலும் கிராமப்புற பாடசாலைகள் போக்குவரத்து வசதிகளுக்கேற்ப இயங்கும் என்றும் அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் கந்தளாய் பிரதேசத்தில் பெரும்பாலான ஆசிரியர்கள் எரிபொருள்
நெருக்கடியை சந்தித்து வருவதால், பாடசாலைகளை சீராக நடாத்த முடியாத நிலை
ஏற்பட்டிருப்பதாக இந்தகூட்டத்தில் வலயக்கல்வி பணிப்பாளர் எடுத்துக்கூறியதை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
யாருக்கும் தெரியாமல் மயிலை பார்க்க சென்ற மீனா, அவரது அம்மா சொன்ன விஷயம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
படப்பிடிப்பு தளத்தில் திடீர் சண்டை போட்டுக்கொண்ட மகாநதி சீரியல் நடிகர்கள்... வைரலாகும் வீடியோ Cineulagam
ஆசிய நாடொன்றில்... கோடீஸ்வரர்கள் குவித்து வைத்திருக்கும் ரூ 12,500 கோடி மதிப்பிலான தங்கம் News Lankasri