மழையிலும் பயிற்சி… மனதில் ஒரே இலக்கு! தேசிய மேடையில் சாதித்துக் காட்டிய சிங்கப்பெண்கள்
திருகோணமலை மாவட்டத்தின் வெருகல் பிரதேசத்திலுள்ள இலங்கைத்துறைமுகத்துவாரம் இந்துக் கல்லூரியின் 17 வயதுக்குட்பட்ட மகளிர் உதைபந்தாட்ட அணி, போதிய விளையாட்டு வசதிகள் இன்றியும் அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான உதைபந்தாட்டப் போட்டியில் மூன்றாம் இடத்தைப் பெற்று சாதனை படைத்துள்ளது.
2022ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இம்மாணவிகளின் விளையாட்டுப் பயணம், பல்வேறு சவால்களைக் கடந்து 2026ஆம் ஆண்டு மாகாண சம்பியன் பட்டத்தை வென்று தேசிய மட்டம் வரை முன்னேறியுள்ளது.
போதிய உதைபந்துகள், கோல் போஸ்ட்கள் மற்றும் பயிற்சி வசதிகள் இல்லாத சூழலிலும், மாணவிகள் தமது விடாமுயற்சியாலும் பயிற்றுவிப்பாளர்கள் மற்றும் ஆசிரியர்களின் அர்ப்பணிப்பாலும் இந்த வெற்றியைப் பெற்றுள்ளனர்.
மழை உள்ளிட்ட இயற்கைச் சவால்களுக்கு மத்தியிலும் பயிற்சிகளைத் தொடர்ந்து மேற்கொண்ட இம்மாணவிகள், எதிர்காலத்தில் தேசிய சாம்பியன் பட்டத்தை வெல்வதைத் தமது அடுத்த இலக்காகக் கொண்டுள்ளனர்.
இதேவேளை, விளையாட்டில் சாதனை படைக்கும் இம்மாணவிகள் கல்வியிலும் முன்னேற விரும்புகின்றனர்.
எனினும், உயர்தரத்தில் கணிதம் மற்றும் விஞ்ஞானப் பாடங்களைக் கற்பதற்கான ஆய்வகங்கள் உள்ளிட்ட அடிப்படை கல்வி வசதிகள் போதியளவில் இல்லாததால், நகரங்களை நோக்கிச் செல்ல வேண்டிய நிலை காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மேலும், கிராமத்திலிருந்து தொலைதூரப் பகுதிகளுக்குப் பயிற்சிக்கும் போட்டிகளுக்கும் செல்வதற்கான போக்குவரத்து வசதிகளும் மேம்படுத்தப்பட வேண்டியுள்ளன.
தனது சொந்தச் செலவிலும் மாணவிகளுக்குத் தேவையான விளையாட்டு உபகரணங்களைப் பெற்றுக்கொடுத்து, பாடசாலை நேரத்திற்குப் பின்னரும் பயிற்சியளித்து வரும் பயிற்றுவிப்பாளரின் அர்ப்பணிப்பும் இந்த வெற்றியில் முக்கிய பங்கு வகித்துள்ளது.
திறமையும் விடாமுயற்சியும் இருந்தால் தடைகளைத் தாண்டி சாதிக்க முடியும் என்பதை நிரூபித்துள்ள இம்மாணவிகள், தமது அடுத்த இலக்கான தேசிய சம்பியன் பட்டத்தை வெல்வதற்குத் தேவையான விளையாட்டு உபகரணங்கள், பயிற்சி வசதிகள், போக்குவரத்து மற்றும் கல்வி வளங்களை எதிர்பார்த்துள்ளனர்.
முழுமையான தகவல்களுக்கு கீழுள்ள காணொளியை காண்க...
கடும் நஷ்டத்தை நோக்கி ஜேசன் சஞ்சய் இயக்கிய சிக்மா படம்... இதுவரை எவ்வளவு கலெக்ஷன் தெரியுமா? Cineulagam
நாளை நான் இருப்பேனா...? மறைவுக்கு சில நாட்களுக்கு முன் நானா படேகர் பேசிய வார்த்தைகள் வைரல்! Manithan