பாலியல் வன்புணர்வுக்குட்படுத்தப்பட்ட பாடசாலை மாணவி: சந்தேகநபரை தேடி பொலிஸார் தீவிர விசாரணை
பாடசாலை மாணவி ஒருவரை தொடர்ச்சியாக பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய சம்பவம் தொடர்பில் 21 வயதுடைய இளைஞனை கைது செய்வதற்கான விசாரணைகளை பிபில பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
குறித்த விடயம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் மூலம் மாணவி பலமுறை பாலியல் வன்புணர்வுக்கு உற்படுத்தப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
சம்பவத்தில் பாதிக்கப்பட்ட 14 வயதுடைய மாணவி தனது பாடசாலை தோழியின் சகோதரனுடன் காதல் உறவில் இருந்துள்ளார்.
கைது நடவடிக்கை
இந்நிலையில், கடந்த 2022ம் ஆண்டு அக்டோபர் 22ம் திகதி, தனது தோழியின் வீட்டிற்கு சென்றதாகவும், இதன் போது மாணவியின் காதலனால் வன்புணர்வுக்கு உற்படுத்தப்பட்டதாகவும் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.
மேலும், அதன் பிறகு பல சந்தர்ப்பங்களில் மாணவியின் காதலனால் வன்புணர்வக்கு உற்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் தற்போது கொழும்பு பகுதிக்கு தொழிலுக்கு சென்றுள்ளதாகவும், அவரை கைது செய்யும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |