பாடசாலைக்கு சென்று வீட்டுக்கு வந்த மாணவிக்கு நேர்ந்த கதி
கோவிட் 19 தொற்றால் பாதிக்கப்பட்ட ஆறாம் வகுப்பு மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு சிங்கள ஊடகம் ஒன்று இது தொடர்பில் செய்தி வெளியிட்டுள்ளது.
உயிரிழந்தவர் நாத்தாண்டிய பகுதியில் உள்ள தேசிய பாடசாலை ஒன்றில் கல்வி பயிலும் தப்போவ பகுதியைச் சேர்ந்த பி. எம். டி. மனிஷா குமாரி பெர்னாண்டோ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாரவில வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் குறித்த மாணவி இன்று உயிரிழந்துள்ளார்.
குறித்த மாணவி கடந்த 28ஆம் திகதி பாடசாலையிலிருந்து வீடு திரும்பும் போது சுகவீனமடைந்து மாரவில வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், மாணவிக்கு கோவிட் தொற்று இருப்பது பரிசோதனையில் தெரியவந்துள்ளது.





குக் வித் கோமாளி டைட்டில் ஜெயித்தது இவர்தான்.. மொத்த ஷோவும் ஸ்கிரிப்ட் தானா? ராஜூ விளக்கம் Cineulagam

கரூரில் 41 பேர் மரணம்.. 34 மணி நேரத்துக்கு பின் வீட்டை விட்டு வெளியே வந்த விஜய்..எங்கு செல்கிறார்? Cineulagam
