சுகவீன விடுமுறைப் போராட்டத்திற்கு அழைப்பு :அதிபர் ஆசிரியர் தொழிற்சங்க கூட்டமைப்பு

Sri Lanka Education Teachers
By Farook Sihan Jul 09, 2024 12:11 AM GMT
Report

இலங்கையின் ஆசிரியர்கள் அதிபர்களுக்கு எழுத்து மூலம் வாக்குறுதியளிக்கப்பட்டிருந்த சம்பள முரண்பாட்டுத் தீர்வின்படி இன்னும் இரண்டு பகுதி வழங்கப்படாமையை சுட்டிக்காட்டி அதனை பெறுவதற்காக பல்வேறு போராட்டங்கள் செய்தும் பலனில்லாத நிலையில் எமது ஆசிரியர் அதிபர் தொழிற்சங்கக் கூட்டணி இன்று (09) சுகவீன விடுமுறை போராட்டத்தில் குதிக்கவுள்ளது என இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் செயலாளர் ஏ.ஆதம்பாவா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ஊடகவியலாளர்களுக்கு விளக்கம் அளிக்கும் ஊடகவியலாளர் மாநாடு அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது அல்-கமரூன் வித்தியாலயத்தில் நேற்று (08) இடம்பெற்றுள்ளது.

நான் இறந்தால் இப்படிச் செய்யுங்கள்! வைத்தியர் அர்ச்சுனாவின் மற்றொரு அதிர்ச்சி தகவல்

நான் இறந்தால் இப்படிச் செய்யுங்கள்! வைத்தியர் அர்ச்சுனாவின் மற்றொரு அதிர்ச்சி தகவல்

சம்பள முரண்பாடு

இங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட ஏ. ஆதம்பாவா, இன்று நாடு முழுவதும் சுகவீன விடுமுறை போராட்டங்கள் நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளோம். இந்தப் போராட்டத்தின் நோக்கத்தை தெளிவாக ஆட்சியாளர்கள் விளங்கிக் கொள்ள வேண்டும்.

நாங்கள் கேட்பது சம்பள அதிகரிப்பு அல்ல. சம்பள முரண்பாட்டுக்கான தீர்வு எனக்கு வேண்டும். இதற்காக முழு நாட்டிலுமுள்ள அனைத்து கல்வி வலையங்களிலும் உள்ள அதிபர் ஆசிரியர்கள் பூரண ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்கின்றோம்.

சுகவீன விடுமுறைப் போராட்டத்திற்கு அழைப்பு :அதிபர் ஆசிரியர் தொழிற்சங்க கூட்டமைப்பு | School Teachers Protest Today

இதேவேளை கடந்த காலங்களில் எமது போராட்டங்களில் நாட்டின் பல பாகங்களில் இருந்தும் பூரண ஒத்துழைப்பு கிடைத்தது. கிழக்கு மாகாணத்தில் உள்ள தமிழ் பேசும் அதிபர் ஆசிரியர்களும் நாளை பூரண ஒத்துழைப்பு வழங்குவார்கள் என்ற நம்பிக்கை எமக்குண்டு.

ஆசிரியர், அதிபர் தொழிற்சங்கக் கூட்டணியின் தலைமையில் நடத்திய போராட்டங்களின் விளைவாக 1997 ஆம் ஆண்டு முதல் நிலவி வந்த ஆசிரியர் அதிபர் சம்பள வேறுபாட்டில் 1/3 பங்கை வென்றெடுக்க முடிந்தது.

கொழும்பு செல்ல முன்னர் வைத்தியர் அர்ச்சுனா மக்களுக்கு அளித்த வாக்குறுதி

கொழும்பு செல்ல முன்னர் வைத்தியர் அர்ச்சுனா மக்களுக்கு அளித்த வாக்குறுதி

முன்வைக்கப்பட்ட பிரேரணை

என்றாலும் சுபோதானி சம்பளக் குழுவினால் முன்வைக்கப்பட்ட பிரேரணையில் உள்ளடங்கிய சம்பளத்தில் மேலும் 2/3 பங்கு எமக்கு எஞ்சியுள்ளது.

எஞ்சிய 2/3 சம்பள ஏற்றத்தாழ்வை வென்றெடுக்கும் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்கின்ற நாம், தொடர்ந்தும் போராட்டத்தில் ஈடுபட ஆட்சியாளர்கள் வழியமைக்காமல் எமது நியாயமான கோரிக்கைக்கு செவி சாய்த்து எங்களது கோரிக்கையை நிறைவேற்ற முன்வர வேண்டும். தவறும் போது, தொடர் போராட்டங்களை நடத்துவதற்கும் நாங்கள் தயங்க மாட்டோம்.

சுகவீன விடுமுறைப் போராட்டத்திற்கு அழைப்பு :அதிபர் ஆசிரியர் தொழிற்சங்க கூட்டமைப்பு | School Teachers Protest Today

இதனால் நாட்டில் ஏற்படுகின்ற அசௌகரியங்களுக்கு ஆட்சியாளர்கள் முகம் கொடுக்க வேண்டி வரலாம் என்றும் குறிப்பிட்டார்.

இங்கு இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் அம்பாறை மாவட்ட செயலாளர் எம். எஸ். சத்தார், ஆசிரியர் சேவை சங்கத்தின் உறுப்பினர் ஏ.சியாம், இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் கல்முனை கல்வி வலைய செயலாளர் எம்.எஸ்.எம். சியாத், இலங்கை ஆசிரியர் சங்கத்தின் கல்முனை கல்வி வலைய இணைப்பாளர் ஏ.எம்.எம். ஸாகிர் ஆகியோரும் கலந்துகொண்டு இங்கு கருத்து வெளியிட்டனர்.

நோயாளிகளை கைவிட்டுவிட்டு ஓடிய வைத்தியர்கள்! சாவகச்சேரி போராட்டத்தில் பெண் காரசார கேள்வி

நோயாளிகளை கைவிட்டுவிட்டு ஓடிய வைத்தியர்கள்! சாவகச்சேரி போராட்டத்தில் பெண் காரசார கேள்வி

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW


மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US