கொழும்பில் பிரபல பாடசாலையொன்றின் உதவி அதிபர் செய்த மோசமான செயல்
கொழும்பில் பிரபல பாடசாலை ஒன்றின் உதவி அதிபர் மது போதையில் பாடசாலைக்கு வருகை தந்த சம்பவமொன்று பதிவாகியுள்ளதாக காணொளியொன்று வெளியாகியுள்ளது.
மது போதையில் பாடசாலைக்கு வருகை தந்த ஆசிரியர் தனது கடமைகளை சரிவர நிறைவேற்றியுள்ளார். எனினும் திடீரென அவர் பாடசாலையிலிருந்து வீட்டுக்கு செல்வதற்காக உந்துருளியில் ஏறியுள்ளார்.

அதிபரின் செயலை கண்டித்து பெற்றோர்கள் முரண்பாடு
இதன்போது குறித்த உதவி ஆசிரியர் உந்துருளியை இயக்க முடியாது தடுமாறிய நிலையில் கட்டுப்பாட்டினை இழந்து திடீரென கீழே விழுந்துள்ளார்.
இந்நிலையில், கீழே விழுந்த உதவி அதிபரை , பாடசாலையில் கடமையாற்றும் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் தூக்கும் வேளையிலேயே அவர் மது போதையில் இருந்தமை தெரியவந்துள்ளது.
அதேநேரம் பாடசாலையில் பெற்றோர்களுக்காக மாதாந்த கூட்டம் நடைபெறவிருந்தமையினால் பெற்றோர்கள் சிலர் பாடசாலைக்கு வருகை தந்திருந்த நிலையில்,உதவி அதிபரின் செயலை கண்டித்து பெற்றோர்கள் அதிபருடன் முரண்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 2 நாட்கள் முன்
2007ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளிவந்த அழகிய தமிழ் மகன், வேல், பொல்லாதவன் படங்கள்.. பாக்ஸ் ஆபிஸ் வசூல் எவ்வளவு தெரியுமா? Cineulagam
128 ஆண்டுக்கு பின் ஒலிம்பிக்கில் கிரிக்கெட் - ஆனால் பாகிஸ்தான், இலங்கைக்கு வாய்ப்பில்லை News Lankasri