மத்திய ஆபிரிக்கக் குடியரசில் தங்கச் சுரங்கம் சரிந்து வீழ்ந்து விபத்து : 30இற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு
மத்திய ஆபிரிக்கக் குடியரசின் மேற்குப் பகுதியில், கெமரூன் எல்லைக்கு அருகில் அமைந்துள்ள பாரம்பரிய தங்கச் சுரங்கமொன்று சரிந்து வீழ்ந்ததில் 30இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கெமரூன் எல்லைக்கு அருகிலுள்ள சாம்போயே கிராமத்தில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மீட்கப்பட்டுள்ள உடல்கள்
சம்பவ இடத்திலிருந்து இதுவரை 30 உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், மேலும் சிலர் இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுவதால் மீட்புப் பணிகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

பாதுகாப்பற்ற முறையில் இயங்கிவரும் இவ்வாறான சட்டவிரோத மற்றும் பாரம்பரியச் சுரங்கங்களில் போதிய பாதுகாப்பு உபகரணங்கள் இன்மையால் அடிக்கடி இவ்வாறான விபத்துக்கள் இடம்பெற்று வருகின்றன.
இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான நிவாரணங்களை வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
Bigg Boss 10: கோபத்தில் இருந்த விஜய் சேதுபதியை கூலாக மாற்றிய போட்டியாளர்... அப்படியென்ன நடந்தது தெரியுமா? Manithan
Jason Sanjay: தோல்வியில் முடிந்த காதல்.. போலிசில் மாட்டிய சஞ்சய்! தளபதி மகனின் தெரியாத மறுபக்கம் Manithan