பிரித்தானிய இராணுவ விமானத் தள சம்பவத்துடன் தொடர்புடைய நபர் பிணையில் விடுதலை
பிரித்தானியாவின் இராணுவ விமானத் தளத்திற்கு அருகில் இடம்பெற்ற பாதுகாப்புச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட நபர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாக பயங்கரவாத எதிர்ப்புப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தென்மேற்கு இங்கிலாந்தின் ‘ஆர்.ஏ.எஃப். ஃபேர்ஃபோர்ட்’ இராணுவத் தளத்திற்கு அருகில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பான விசாரணைகளின் ஒரு பகுதியாக, பயங்கரவாதச் செயல்களுக்குத் திட்டமிட்டார் என்ற சந்தேகத்தின் பேரில் 25 வயதான குறித்த நபர் மத்திய லண்டனில் வைத்து கைது செய்யப்பட்டிருந்தார்.
முன்னதாக, குளொஸ்டர்ஷையரில் அமைந்துள்ள குறித்த இராணுவ விமானத் தளத்திற்கு அருகில் வெடிபொருட்கள் மற்றும் பயங்கரவாதக் குற்றச்சாட்டுகளின் சந்தேகத்தின் பேரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்ட மேலும் ஐந்து நபர்களும் இந்த வார தொடக்கத்தில் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தனர்.
விசாரணைகள்
இந்தச் சம்பவத்தில் ஈரான் தொடர்புபட்டிருப்பதற்கான "வலுவான சான்றுகள்" இருப்பதாக பிரித்தானிய பிரதமர் ஆண்டி பர்ன்ஹாம் தெரிவித்துள்ள போதிலும், குறித்த குற்றச்சாட்டை ஈரான் முற்றாக நிராகரித்துள்ளது.

இருப்பினும், இது தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.