பிரபல பாடசாலை அதிபரின் பொறுப்பற்ற செயல்: பெற்றோர் விசனம் (Photos)
கிளிநொச்சி முருகானந்தா கல்லூரிக்கு ஆளுமையான அதிபரொருவரை நியமித்து தமது பிள்ளைகளின் கல்வியை பாதுகாக்குமாறு பெற்றோரும், பாடசாலை பழைய மணவ பொது அமைப்புக்களும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பாடசாலையினுடைய வளர்ச்சிக் கருதி கடந்த வியாழக்கிழமை (15-09-2022) டக்ளஸ் தேவானந்தாவுடன் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
கிளிநொச்சி வடக்கு கல்வி வலயத்தின் முதல் நிலை பாடசாலைகளில் ஒன்றாக காணப்படுகின்ற கிளி. முருகானந்தா கல்லூரிக்கு பொருத்தமான அதிபரை நியமிக்காத நிலையில் தற்போது கல்வியில் பின்தங்கி காணப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

காணாமல் போயுள்ள பாடசாலை சொத்துக்கள்
அத்துடன், பாடசாலையில் இருந்து பெருமளவான சொத்துக்கள், பாடசாலை அபிவிருத்தி சங்கம் மற்றும் பழைய மாணவர் சங்கம் என்பவற்றிற்கு தெரியாமலும், அனுமதியின்றியும் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மனு கையளிப்பு
எனவே, தற்போதுள்ள ஆளுமையற்ற அதிபரை இடமாற்றி, ஆளுமையுள்ள ஒரு அதிபரை பாடசாலைக்கு நியமிக்க கோரி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் மனுவொன்றும் கையளிக்கப்பட்டுள்ளது.
குறித்த சந்திப்பின் போது மேலதிக இணைப்பாளர் கோ. றுசாங்கள், மாவட்ட அமைப்பாளர் வை. தவநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
படப்பிடிப்பு தளத்தில் திடீர் சண்டை போட்டுக்கொண்ட மகாநதி சீரியல் நடிகர்கள்... வைரலாகும் வீடியோ Cineulagam
2026: 12 ராசிகளுக்குமான சிறப்பு பலன்கள்... 4 பிரபல ஜோதிட நிபுணர்களின் கணிப்பு ஒரே பார்வையில்! Manithan