வெறிச்சோடி காணப்பட்ட கட்டடத்தில் பாடசாலை மாணவர்கள் செய்த மோசமான செயல்
பதுளை - வெலிமடை (Welimada) பகுதியில் கைவிடப்பட்ட கட்டடமொன்றில் மதுபான விருந்து நடத்திய பாடசாலை மாணவர்கள் குழுவொன்றினை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
வெலிமடை பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குறித்த பகுதியில் வெறிச்சோடி காணப்பட்ட கட்டடத்தில் அதிக விலைக்கு விற்கப்படும் மதுபானத்தை 5 பாடசாலை மாணவர்கள் மற்றும் 2 பாடசாலை மாணவிகள் அருந்திக்கொண்டிருந்த நிலையில், கைது செய்யப்பட்டு பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

வெலிமடை பொலிஸார் விசாரணை
இந்த கட்டடத்திற்கு பயிற்சி வகுப்புகளுக்காக வருகை தந்துள்ளதாக குறிப்பிட்டு, கட்டடத்தின் திறப்பினை உடைத்து உள்ளே நுழைந்து மது விருந்துக்கு ஏற்பாடு செய்துள்ளமையும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வெலிமடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
இந்தியாவிற்கு புறப்படவிருந்த ஈரானிய சரக்கு விமானம் மீது வான்வழித் தாக்குதல் நடத்திய அமெரிக்கா News Lankasri
ஈரான் மீது குண்டுவீச்சு... பந்தயத்தில் 160,000 டொலர் சம்பாதித்த இஸ்ரேலிய இராணுவ அதிகாரி News Lankasri