தமிழருக்கு என்ன நடந்தாலும் சர்வதேசம் கேட்காது: சரவணபவன் ஆதங்கம் (Video)
தமிழருக்கு என்ன நடந்தாலும் சர்வதேசமும் கேட்காது அயல்நாடான இந்தியாவும் கேட்காது என நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினரும் இலங்கை தமிழரசு கட்சியின் முக்கியஸ்தருமான ஈஸ்வரபாதம் சரவணபவன் தெரிவித்துள்ளார்.
படுகொலைகள் தொடர்பில் சர்வதேச விசாரணைகள் இடம்பெற்றுப் பாதிக்கப்பட்ட தரப்புக்களின் நீதி உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
செஞ்சோலை படுகொலை நினைவேந்தலினை அனுஷ்டித்த பின் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது குறித்து மேலும் தெரிவிக்கையில், இன்று (14.08.2023) செஞ்சோலை படுகொலை நினைவுநாள்.
அரச இயந்திரத்தால் படுகொலை
இவ்வளவு மாணவர்களையும் ஒரே நேரத்தில் கிபிர் விமானத்தினால் குண்டுகள் போட்டு 61 பேரைக் கொண்டார்கள்.
இதில் மாணவர்கள் மாத்திரம் 54 பேர். இந்த பிஞ்சு குழந்தைகள் அரச இயந்திரத்தால் படுகொலை செய்யப்பட்டனர்.
இதுவரை இந்த கொலை பற்றி சர்வதேசமோ அல்லது உள்ளூரிலோ இது பற்றி எந்த விசாரணைகளும் இடம்பெறவில்லை. இதற்கு ஒரு நீதியும் இல்லை, தீர்ப்பும் இல்லை.
இது மாத்திரமல்ல இது போல் நவாலியிலும் நடந்தது. நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டார்கள்.
இந்த நிலைமை தான் தொடர்ந்து கொண்டு இருக்கிறது. இந்த கொலைகள் இனப்படுகொலைக்கு மிக ஆதாரமான ஒரு விடயமாக இருந்தாலும் அதை இனப்படுகொலை இல்லை என்று நிரூபிக்க முற்படுகின்றார்கள்.
ஜனாதிபதி உத்தரவாதம்
இந்த கொலை சம்மந்தமாக இனியாவது ஒரு சர்வதேச நீதி கிடைக்கப்பெறவேண்டும். ஆனால் எதுவும் நடந்த மாதிரி இல்லை. இங்கே எத்தனையோ ஆண்டுகள் போய் விட்டன.
மீண்டும் விசாரணை வரும் என்றவாறு பேசப்படுகின்றன. ஆனால் இவை எல்லாம் எங்களைப் பொறுத்த அளவில் இந்த நாட்டில் சிங்கள பெரும்பான்மையினருடன் எதுவும் செய்ய முடியாது.
இதைத் துல்லியமாகக் கணித்தவர் வேலுப்பிள்ளை அவர்களின் மகன். ஆனால் இன்று மீண்டும் இந்த நிலமைக்குக் கொண்டு வர எத்தனிக்கின்றார்கள்.
அவர்களுடைய ஒவ்வொரு செயற்பாடுகளும் மீண்டும் இந்த நிலையைத் தோற்றுவிக்காது என ஜனாதிபதி உத்தரவாதம் கொடுக்க முடியாது. எதுவும் நடக்கலாம். ஜனாதிபதியால் கூட ஒரு முடிவும் எடுக்க முடியாமல் திணறுகின்றார்.
இங்கே எமது பத்திரிகை நிறுவனத்தில் உள்ளே நுழைந்து கூட சுட்டார்கள் அதற்கும் ஒரு நீதியும் இல்லை. இருவர் இறந்தார்கள், 16 பேர் காயமடைந்தார்கள்.
இங்குத் தமிழனுக்கு எது நடந்தாலும் சர்வதேச சமூகமும் கேட்கின்றார்கள் இல்லை, அண்மை நாடான இந்தியாவும் கேட்கின்றது இல்லை, இலங்கை அரசாங்கமும் அதைச் செயற்படுத்தத் தயாராக இல்லை.
இது அவர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக ஓடிக் கொண்டு இருக்கின்றது இவர்களுடைய ஆத்மா சாந்தியடைய நாம் எல்லோரும் பிரார்த்திப்பதைத் தவிர வேறு வழி எங்களுக்கு இல்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
முதலாம் இணைப்பு
முல்லைத்தீவு - வள்ளிபுனம், இடைக்கட்டு பகுதியில் அமைந்துள்ள செஞ்சோலை வளாகத்தில் பயிற்சிக்காக சென்றிருந்த மாணவர்கள் மீது இலங்கை விமானப்படை நடத்திய தாக்குதலில் உயிரிழந்த பாடசாலை மாணவர்கள் 53 பேர் மற்றும் பணியாளர்கள் 4 பேரினதும் 17ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2006.08.14 ஆம் திகதியன்று வள்ளிபுனம் - இடைக்கட்டு பகுதியில் உள்ள செஞ்சோலை வளாகத்தில் விமானத்தாக்குதல் இடம்பெற்ற நேரத்தில் இன்று (14.08.2023) இந் நிகழ்வு உணர்வுப்பூர்வமாக நடைபெற்றுள்ளது.
மலர் தூவி அஞ்சலி
சமூக செயற்பாட்டாளர் தம்பையா யோகேஸ்வரன் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில், உயிரிழந்த உறவுகளுக்கு சுடர்யேற்றி, அக வணக்கம் செலுத்தி மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.
வருடந்தோறும் குறித்த படுகொலை நினைவேந்தல் நிகழ்வு வள்ளிபுனம் பகுதியில் அனுஸ்ரிக்கப்படுவதோடு தமிழர் தாயகத்தில் பல்வேறு இடங்களிலும் நினைவேந்தல் நிகழ்வு இடம்பெறுவது வழமை.
குறித்த நிகழ்வில் அரசியல் பிரமுகர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், பொதுமக்கள் , நலன்விரும்பிகள், செஞ்சோலையில் உயிரிழந்த பிள்ளைகளின் பெற்றோர்கள், உறவினர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
அத்துடன், யாழ். பல்கலைக்கழகத்தில் இன்று (14.08.2023) மதியம் 12 மணியளவில் செஞ்சோலை
படுகொலையின் 17ஆவது ஆண்டு நினைவேந்தல் உணர்வுபூர்வமாக முன்னெடுக்கப்பட்டுள்ளது













யாழ்ப்பாணமே நீ குடிப்பது நல்ல தண்ணியா 19 மணி நேரம் முன்

நெருக்கமானவர் உடன் Vacation சென்றுள்ள அய்யனார் துணை சீரியல் நடிகை மதுமிதா.. புகைப்படங்கள் இதோ Cineulagam

ட்ரம்பிற்கு கெட்ட செய்தி... அமெரிக்காவின் சக்திவாய்ந்த வெடிகுண்டுக்கு எதிரி நாடு ஒன்றால் சிக்கல் News Lankasri
