பிளேட்டால் கையை அறுத்துக்கொண்ட பாடசாலை மாணவன்! விசாரணையில் வெளியான தகவல்
போதைப்பாக்குடன் பாடசாலைக்கு வந்த மாணவன், தனது கையினை பிளேட்டால் அறுத்து காயங்களுக்கு உள்ளாகிய நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தெல்லிப்பளை பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் நேற்று (21) குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த மாணவன் போதை ஊட்டிய பாக்குடன் பாடசாலைக்கு வருகை தந்துள்ளார்.அது தொடர்பில் அறிந்து கொண்ட ஆசிரியர்கள் மாணவனிடம் விசாரணைகளை முன்னெடுத்து பாக்கினையும் மீட்டுள்ளனர்.
விசாரணைகள் தீவிரம்
அதனை அடுத்து அதிபர் ஊடாக அப்பகுதி சுகாதார பரிசோதகருக்கு சம்பவம் தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது குறித்த மாணவன் திடீரென தனது கையினை வெட்டி காயப்படுத்திய நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், மாணவனுக்கு எவ்வாறு போதைப்பொருள் கிடைக்கப்பெற்றது என்பது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.





மனிதகுலத்தை கட்டுப்படுத்தப்போகும் AI: 2026ஆம் ஆண்டுக்கான பாபா வங்காவின் அதிரவைக்கும் கணிப்புகள் News Lankasri
