பெண்களை இலக்கு வைத்து மாணவனின் தகாத செயல் அம்பலம்
மினுவாங்கொட பிரதேசத்தில் பெண்களின் தனிப்பட்ட புகைப்படங்களை தந்திரமாக பெற்ற பாடசாலை மாணவன் கைது செய்யப்பட்டுள்ளார்.
பிரபல மொடல் அழகிகளின் பெயரில் இரண்டு வாட்ஸ்அப் கணக்குகளை உருவாக்கி, மோடலிங் துறையில், வேலை தருவதாக கூறி இவ்வாறு அவர் புகைப்படங்களை பெற்றுக் கொண்டுள்ளார்.
குறித்த மாணவனை கணினி குற்றப் பிரிவின் சமூக ஊடக குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் 19 வயதுடையவர் எனவும் இம்முறை உயர்தரப் பரீட்சை எழுதும் மாணவர் எனவும் தெரியவந்துள்ளது.
குறுஞ்செய்தி மூலமே தொடர்பு
சந்தேக நபர் வாட்ஸ்அப் தொழில்நுட்பம் மூலம் தந்திரமாக பெற்று கணினியில் சேமித்து வைத்திருந்த அழகான இளம் பெண்கள் 15 பேரின் அந்தரங்க புகைப்படங்களை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.
பிரபல நிறுவனங்களில் மொடலிங் துறையில் பணியாற்ற விரும்பும் அழகான யுவதிகளுக்கு வாய்ப்பு வழங்குவதாகவும், விரும்பும் இளம் பெண்களுக்கு வாய்ப்பு வழங்குவதாகவும் கூறி குறித்த மாணவர் பிரபல மொடல் அழகிகளின் பெயர்களை பயன்படுத்தி போலியான வாட்ஸ்அப் கணக்கை உருவாக்கியுள்ளார்.
ஆர்வத்தை வெளிப்படுத்தும் இளம் பெண்களின் புகைப்படங்களை அவர்கள் தந்திரமாக பெற்றுள்ளார். இது தொடர்பில் மின்னணு ஊடக நிறுவனம் மூலம் தகவல் கிடைத்ததாக மூத்த பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
சந்தேக நபர் ஒவ்வொரு பெண்களுடனும் குறுஞ்செய்தி மூலமே தொடர்பில் இருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.





தங்கம் அதிகம் வைத்திருக்கும் 7 முக்கிய நாடுகள்: தங்கத்தை குவிப்பதற்கான ரகசியம் இதுதான் News Lankasri
