பாடசாலை மாணவர்களுக்கு கிடைக்கவுள்ள சலுகை: கல்வியமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு
பாடசாலை மாணவர்களுக்கு காலணிகள் கொள்வனவு செய்ய 3000 ரூபாய் மதிப்புள்ள வவுச்சர்கள் ஏறக்குறைய 800,000 பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
பொருளாதார ரீதியாக பாதிப்பிற்கு உள்ளான மாணவர்களுக்கு இந்த கொடுப்பனவு வழங்கப்படும் எனவும் எதிர்வரும் இரண்டு அல்லது மூன்று வாரங்களில் வவுச்சர்கள் விநியோகிக்கப்படும் எனவும் கல்வி அமைச்சின் அறிக்கை ஒன்றில் அமைச்சர் குறிப்பிட்டார்.
மாணவர்களுக்கு காலணிகள் கொள்வனவு செய்ய அடுத்த வருடம் (2024) இது மேலும் அதிகரிக்கப்படும் என அமைச்சர் பிரேமஜயந்த மேலும் தெரிவித்துள்ளார்.
கல்வி அமைச்சர் தகவல்
இதேவேளை அடுத்த வருடம் முதல் பாடசாலை அமைப்பில் பல மாற்றங்கள் நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாக கல்வி அமைச்சர் கூறியுள்ளார்.
காலியில் உள்ள பாடசாலை ஒன்றில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அமைச்சர் பிரேமஜயந்த மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.

மலைபோல் குவிந்துள்ள சொத்தில் 1 சதவீதம் மட்டுமே பிள்ளைகளுக்கு... பில்கேட்ஸ் கூறும் காரணம் News Lankasri
