முல்லைத்தீவில் போதைப்பொருளுடன் பாடசாலைக்கு சென்ற மாணவன்: தீவிர விசாரணையில் பொலிஸார்
முல்லைத்தீவில் கடந்த 25ஆம் திகதி போதைபொருளுடன் கைது செய்யப்பட்ட பாடசாலை மாணவனின் தாயை கைது செய்து பொலிஸார் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பிலான விசாரணைக்கு நேற்று (29.07.2024) மாணவனின் வீட்டுக்கு சென்ற பொலிஸார், அவரது தாயார் கைதுசெய்து செய்து விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியுள்ளனர்.
நீதிமன்றில் முன்னிலைப்படுத்தும் நடவடிக்கையிலும் இந்த சம்பவம் தொடர்பிலான மேலகதி விசாரணையிலும் முல்லைத்தீவு பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் தெரிய வருகையில்,
கஞ்சா பொதி
முல்லைத்தீவில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றில் கல்வி பயிலும் மாணவன் ஒருவரிடம் கஞ்சா பொதி காணப்பட்டமை சர்ச்சைகளை தோற்றுவித்திருந்தது.
கடந்த வியாழக்கிழமை (25.07.2024) இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
முல்லைத்தீவில் அமைந்துள்ள பாடசாலைக்கு தரம் 8 ஆம் ஆண்டில் கல்வி கற்கும் மாணவன் ஒருவர் தனது வீட்டில் இருந்து வழமைப்போல சென்றுள்ளார்.
இதன்போது சந்தேகத்திற்கிடமான முறையில் அவர் வைத்திருந்த சிறு பொதி ஒன்றினை சக மாணவர்கள் பாடசாலையில் வைத்து அவதானித்துள்ளனர்.
மாணவனிடம் விசாரணை
இதன்போது சக மாணவர்கள் இது தொடர்பில் பாடசாலை அதிபரிடம் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக குறித்த மாணவனிடம் விசாரணை மேற்கொண்ட பாடசாலை அதிபர், மாணவன் வைத்திருந்த பொதிக்குள் கஞ்சா போதைப்பொருள் இருப்பதினை அவதானித்துள்ளார். இதனை தொடர்ந்து மாணவனை முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளார்.
இந்நிலையில் தகவலறிந்த பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து மாணவனின் தாயை கைது செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |