யாழில் முதியவர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்ப்பு
யாழ்ப்பாணம் - வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அராலி மேற்கு பகுதியில் முதியவர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துக்கொண்டுள்ளார்.
இந்த சம்பவம் இன்று(30.07.2024) காலை இடம்பெற்றுள்ளது.
இதன்போது அராலி மேற்கு பகுதியைச் சேர்ந்த 80 வயதுடைய கந்தையா செல்லச்சாமி என்ற முதியவரே உயிரிழந்துள்ளார்.
மரண விசாரணை
குறித்த முதியவரும் அவரது மனைவியும் சம்பவம் நிகழ்ந்த வீட்டில் வசித்து வந்துள்ளனர்.

இந்நிலையில் அவரது மனைவி இன்று(30) காலை வெளியே சென்றிருந்தவேளை அவர் தூக்கிட்டு உயிர்மாய்த்துக்கொண்டுள்ளார்.
அத்துடன், அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டுள்ளதுடன் உடற்கூற்று பரிசோதனைக்காக சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
அய்யனார் துணை சீரியல் படப்பிடிப்பு தளத்தில் நடிகை மதுமிதாவிற்கு ஏற்பட்ட சோகம்... வெளிவந்த வீடியோ Cineulagam
சேது-ஐஸ்வர்யா நிச்சயதார்த்தத்தில் நடந்த பரபரப்பு சம்பவம், தமிழ் செய்யப்போவது என்ன?- சின்ன மருமகள் சீரியல் Cineulagam