கெஹலியவின் பிணை தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
தம்மை பிணையில் விடுவிக்குமாறு கோரி கெஹலிய ரம்புக்வெல்ல சமர்ப்பித்த இடைக்கால கோரிக்கை மீதான மனுவை ஓகஸ்ட் 09ஆம் திகதி பரிசீலிக்கவுள்ளதாக நீதிமன்றம் அறிவித்துள்ளது.
தரம்மற்ற மருந்து கொள்வனவு சம்பவம் தொடர்பான விசாரணை முடியும் வரை தன்னை விளக்கமறியலில் வைக்குமாறு மாளிகாகந்த நீதவான் நீதிமன்றம் வழங்கிய உத்தரவை ரத்து செய்யுமாறு கோரி முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தாக்கல் செய்த ரிட் மனுவை எதிர்வரும் ஓகஸ்ட் 09ஆம் திகதி பரிசீலிக்கவுள்ளதாக நீதிமன்றினால் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மனு இன்று நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில் இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
தரமற்ற தடுப்பூசிகளை கொள்வனவு
தரமற்ற தடுப்பூசிகளை கொள்வனவு செய்த சம்பவம் தொடர்பில் முன்னாள் சுகாதார அமைச்சர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

தம்மை பிணையில் விடுவிக்குமாறு கோரி கெஹலிய ரம்புக்வெல்ல சமர்ப்பித்த இடைக்கால கோரிக்கை மீதான உத்தரவு அன்றைய தினம் அறிவிக்கப்படும் எனவும் நீதிமன்றம் அறிவித்துள்ளது.
இந்த உத்தரவு ஓகஸ்ட் 01ஆம் திகதி வெளியிடப்படும் என்று முன்னதாக அறிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
அப்பாவுக்கு பிடிக்கும்... இலங்கை பாடகர் வாகீசனின் பாடலுக்கு நாட்டியம் ஆடி இந்திரஜா போட்ட பதிவு! Manithan
படப்பிடிப்பு தளத்தில் திடீர் சண்டை போட்டுக்கொண்ட மகாநதி சீரியல் நடிகர்கள்... வைரலாகும் வீடியோ Cineulagam
வீட்டைவிட்டு வெளியே போக சொன்ன பார்வதி, கண்ணீர்விட்டு அழுத விஜயா... சிறகடிக்க ஆசை சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam