பாடசாலையொன்றின் மாணவர்களுக்கு ஆபத்தாக மாறிய டொபி வகை! 7 பேர் வைத்தியசாலையில் அனுமதி
களுத்துறை - புலத்சிங்கள கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலையொன்றில் கல்விபயிலும் ஏழு மாணவர்கள் இனிப்பு (டொபி ) வகையொன்றை சாப்பிட்ட நிலையில் அகலவத்தை பிம்புர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் பமிலா நிஷாந்தி தெரிவித்துள்ளார்.
மேலதிக வகுப்பொன்றில் பங்கேற்ற ஐந்தாம் வகுப்பு மாணவர்கள் குழுவொன்று கடையொன்றில் ஒரு வகையான இனிப்பு டொபியை வாங்கி உட்கொண்ட நிலையில், திடீரென நோய்வாய்ப்பட்டு 7 பேர் அகலவத்தை பிம்புர எல் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வைத்தியசாலையில் அனுமதி
10-12 வயதுடைய ஏழு சிறுவர்களே இவ்வாறு பாதிக்கப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இருப்பினும் சிறுவர்களின் உடல் நிலைமை மோசமடையவில்லை எனவும் பிம்புர வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் தெரிவித்துள்ளார்.





உலகில் பரவும் மர்ம வியாதி... தொற்றுநோய் அச்சுறுத்தலை அறிவித்த நாடு: அதிகரிக்கும் எண்ணிக்கை News Lankasri

ஜீ தமிழின் நினைத்தாலே இனிக்கும் சீரியலின் கடைசிநாள் படப்பிடிப்பு முடிந்தது... புகைப்படங்கள் இதோ Cineulagam

புதிய என்ட்ரியிடம் கைமாறிய குணசேகரன் வீடியோ, கதிருக்கு வந்த ஷாக்கிங் போன் கால்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
