உடனடியாக வைத்தியசாலையை நாடுங்கள்! சிறுவர்கள் தொடர்பில் பெற்றோருக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர அறிவிப்பு
இலங்கை சிறுவர்களிடையே இந்த நாட்களில் இருமல் மற்றும் மூச்சுத்திணறல் போன்ற நோய் அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக வைத்திய ஆலோசனைகளை பெறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் தீபால் பெரேரா இதனை தெரிவித்துள்ளார்.
இந்த வருடத்தில் ஆஸ்துமா நோயால் பாதிக்கப்படும் சிறுவர்களின் எண்ணிக்கை சடுதியாக பதிவாகியுள்ளதாகவும் தற்போது ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்ட சுமார் 60 சிறுவர்கள் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
வைத்திய ஆலோசனை
குழந்தைகள் அறியாமலேயே கோவிட் தொற்றுக்கு உள்ளாகியிருப்பதே இந்த நிலைக்கு காரணமாக இருக்கலாம் என்றும், இருமல் மற்றும் மூச்சுத்திணறல் போன்ற நோய் அறிகுறிகள் காணப்படுமாயின், அது குறித்து கவனம் செலுத்துமாறும் பெற்றோர்களுக்கு வைத்தியர் அறிவுறுத்தியுள்ளார்.
எனவே, மூன்று நாட்களுக்கு மேலாக காய்ச்சல் நீடித்தால், உடனடியாக குழந்தைகளை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்துமாறும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இதேவேளை, தற்போது டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட அதிகமான குழந்தைகள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமையுமு் இங்கு குறிப்பிடத்தக்கது.