தவறான முறைக்கு உட்படுத்தப்பட்ட 12 வயது சிறுமி: ஆசிரியரும், பெண் துணை அதிபரும் கைது
மத்திய மாகாணம், மஹாவெல பிரதேசத்தில் 12 வயது சிறுமியை தவறான முறைக்கு உட்படுத்தியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக பாடசாலை ஒன்றின் ஆசிரியர் ஒருவரையும், சம்பவத்தை மூடிமறைக்க முயன்ற, அந்த பாடசாலையின் பெண் துணை அதிபரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
பொலிஸ் அவசர தொலைபேசி இலக்கத்தினூடாக கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட முழுமையான விசாரணையை அடுத்து இவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
குறித்த பாடசாலையில் 51 வயதுடைய ஆசிரியர் ஒருவரினால் குறித்த சிறுமி தவறான முறைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
பொலிஸார் விசாரணை
இந்த சம்பவம் தொடர்பில் குறித்த சிறுமி பாடசாலையின் பிரதி அதிபரிடம் முறையிட்டுள்ளார்.

எவ்வாறாயினும், 49 வயதான பெண் பிரதி அதிபர், சம்பவம் தொடர்பில் அமைதியாக இருக்குமாறு பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு அறிவுறுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
குணசேகரன் பற்றி வெளிவந்த ரகசியம், கடும் ஷாக்கில் பெண்கள்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam