இலங்கையின் அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை அறிவிப்பு
அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகள் அனைத்திற்கும் நாளை(22) விடுமுறை வழங்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
எதிர்வரும் பெப்ரவரி மாதம் 1ஆம் திகதி(01.02.2024) பாடசாலைகள் மீள ஆரம்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கல்வி அமைச்சின் விசேட அறிவித்தல்
இது தொடர்பில் கல்வி அமைச்சு விசேட அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது.
2023ஆம் ஆண்டுக்கான அரச மற்றும் அரச அனுசரணையுடன் இயங்கும் தனியார் பாடசாலைகளுக்கான மூன்றாம் தவணையின் முதலாம் கட்ட கற்றல் செயற்பாடுகள் நாளையுடன் முடிவடைகின்றன.
இதன்படி, மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டம் எதிர்வரும் 2024ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் முதலாம் திகதி ஆரம்பிக்கப்படும்.
மேலும், புதிய ஆண்டின் புதிய கல்வி தவணை நடவடிக்கைகள் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 19ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 2 நாட்கள் முன்

குப்பையில் இருந்து சாப்பிட்டு.., அம்பானி திருமணத்தில் வேலை செய்து ரூ.50 சம்பாதித்த நடிகை யார்? News Lankasri

புலம்பெயர்ந்தோர் விவகாரம்... சில நாடுகளின் விசா அனுமதியை ரத்து செய்யவிருக்கும் பிரித்தானியா News Lankasri

அய்யனார் துணை சீரியல் நடிகர் சோழனுக்கு நிஜ வாழ்க்கையில் இப்படியொரு சோகமா?... கண்ணீரில் அரங்கம், வீடியோ Cineulagam
