இலங்கையில் பாடசாலைகளுக்கான விடுமுறைகளில் மாற்றம்! வெளியாகவுள்ள அறிவிப்பு
இலங்கையில் பாடசாலைகளுக்கான விடுமுறை காலத்தை திருத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை
2022 க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையை இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நேற்றைய தினம் அறிவிப்பு வெளியாகியிருந்தது.
முன்னதாக எதிர்வரும் மே 15ஆம் திகதி, 2022ஆம் ஆண்டுக்கான சாதாரண தரப் பரீட்சையை ஆரம்பிக்க திட்டமிடப்பட்டிருந்தது.
இந்த சூழலில் தற்போது க.பொ.த சாதாரண தரப்பரீட்சை எதிர்வரும் மே 29ஆம் திகதி ஆரம்பமாகும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்திரு்நதது.
பாடசாலை விடுமுறை
இதனையடுத்து, பாடசாலை விடுமுறை காலத்தை திருத்துவதற்கு கல்வி அமைச்சின் அதிகாரிகள் தீர்மானித்துள்ளனர்.
இதன்படி ஏப்ரல் மாதம் 17 ஆம் திகதி ஆரம்பமாகும் பாடசாலை தவணையை மே மாதம் 29ஆம் திகதி வரை தொடர்வதென இப்போதைக்கு தீர்மானித்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
இந்த மாற்றம் அடங்கிய புதிய பாடசாலை நேர அட்டவணை விரைவில் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.
சாதாரண தரப் பரீட்சை மே மாதம் 29ஆம் திகதி ஆரம்பமாகி ஜூன் 8ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.





விளாடிமிர் புடின் உட்பட... சீனாவில் ஒன்று கூடும் உலகத்தலைவர்கள்: ட்ரம்பிற்கு புதிய நெருக்கடி News Lankasri

சத்தீஸ்கர் வெள்ளத்தில் சிக்கிய தமிழ் குடும்பம்! சுற்றுலா சென்றபோது 4 பேரும் உயிரிழந்த பரிதாபம் News Lankasri
