யாழில் ஏழு மாதங்களின் பின் பாடசாலை ஒன்றிற்கு இணைக்கப்பட்ட மின்சாரம்
யாழ்ப்பாணம் தீவகப் பகுதிக்கு உட்பட்ட ஊர்காவற்துறை பாடசாலை ஒன்றில் ஏழு
மாதங்களாக மின்சாரம் துண்டிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக செய்திகள் வெளிவந்த நிலையில் வடக்கு மாகாண பிரதம செயலாளர் இ.இளங்கோவனின் தலையீட்டினால் மீண்டும் மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, பாடசாலையில் மின்சார இணைப்புக்கான பட்டியல் நிலுவைத் தொகை வலயக் கல்வி பணிமனையினால் செலுத்தப்படாத நிலையில் குறித்த பாடசாலையில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.
தண்டப் பணம்
துண்டிக்கப்பட்ட மின்சாரத்தை மீளப் பெறுவதற்கு தண்டப் பணமாக சுமார் 3000 ரூபாய் வரை செலுத்த வேண்டும்.
தண்டப் பணத்தை வலயக் கல்வி பணிமனை செலுத்தினால் கணக்காய்வு திணைக்களத்துக்கு காரணம் கூற வேண்டி வரும் என்ற காரணத்தினால் பணத்தைச் செலுத்ததாது காலம் தாழ்த்தி வந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இந்நிலையில், குறித்த விடயம் தொடர்பில் ஊடகங்கள் செய்தி வெளியிட்ட நிலையில் வடக்கு மாகாண பிரதமர் செயலாளர் இ.இளங்கோவனின் துரித நடவடிக்கை காரணமாக வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளருக்கு வழங்கப்பட்ட பணிபுரையின் படி பாடசாலைக்கு மீண்டும் மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |