யாழில் அதிபர் இல்லாமல் இயங்கும் பாடசாலை- அரசுக்கு எதிரான கண்டனத்தை வெளியிட்ட மக்கள்
யாழ்ப்பாணம் - வடமராட்சி பகுதியில் அமைந்துள்ள கரணவாய் வேதாரணியேஸ்வர வித்தியாலயத்தில் நீண்ட நாட்களாக அதிபர் நியமனம் வழங்கப்படாத நிலையில், அங்கு கல்வி கற்கும் மாணவர்களின் பெற்றோர் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
அண்ணளவாக 150 மாணவர்கள் கல்வி கற்கும் குறித்த பாடசாலையின் முன்னாள் அதிபர் கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் 8ஆம் திகதி இடம் மாற்றமாகி சென்றுள்ளார்.
நீதி அமைச்சரின் அநாகரிகச் சைகை..! பகிரங்க மன்னிப்புக் கேட்க வேண்டும் என அஜித் பி. பெரேரா வலியுறுத்தல்
கையொப்பச் சேகரிப்பு போராட்டம்
இதையடுத்து, இன்று வரை புதிய அதிபர் நியமனம் வழங்கப்படவில்லை. தற்போது சிரேஷ்ட ஆசிரியர் ஒருவர் பதில் அதிபராக கடமையாற்றி வருகிறார்.

இந்நிலையில், பாடசாலைக்கு நிரந்தர அதிபரை உடனடியாக நியமிக்குமாறு வலியுறுத்தி, மாணவர்களின் பெற்றோர் நேற்று (20.03.2026) கையொப்பச் சேகரிப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
மேலும், வடக்கு மாகாண ஆளுநருக்கு மனு ஒன்றை அனுப்பிவைக்கும் நடவடிக்கையிலும் அவர்கள் ஈடுபட்டுள்ளனர்.






