பாடசாலை கற்றல் நடவடிக்கை தொடர்பில் அமைச்சு அறிவிப்பு
நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து அரச மற்றும் அரச அனுசரணை பெற்ற தனியார் பாடசாலைகளின் மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்ட கற்றல் செயற்பாடுகள் இன்றைய தினம் ஆரம்பமாகி உள்ளது.
சுதந்திர தினம் விடுமுறை நாளில் கொண்டாடப்பட்டதால் இன்றைய தினம் விடுமுறை வழங்கப்படவுள்ளதாக போலி பிரசாரங்கள் முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
எனினும் இன்றைய தினம் அரச விடுமுறை தினம் இல்லையென பொது நிர்வாக அமைச்சு தெரிவித்துள்ளது.
பொது நிர்வாக அமைச்சு
கல்வி பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை காரணமாக பாடசாலை விடுமுறை, கடந்த டிசம்பர் மாதம் 23ஆம் திகதியிலிருந்து, பெப்ரவரி மாதம் முதலாம் திகதி வரை வழங்கப்பட்டிருந்தது.
விவசாய பாடத்திற்கான வினாத்தாள் முன்னதாகவே வெளியானதையடுத்து, அந்த பாடத்திற்கான பரீட்சையை பெப்ரவரி மாதம் முதலாம் திகதி மீண்டும் நடத்த பரீட்சைகள் திணைக்களம் நடவடிக்கை எடுத்திருந்தது.
அதற்கமைய, பெப்ரவரி மாதம் முதலாம் திகதி ஆரம்பமாகவிருந்த பாடசாலைகளின் மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்ட கற்றல் செயற்பாடுகள் இன்று வரை ஒத்திவைக்கப்பட்டன. அதனை அடுத்து நாடளாவிய ரீதியில் இன்று மீண்டும் பாடசாலைகள் ஆரம்பமாகி உள்ளது.
இந்நிலையில், அரச நிறுவனங்களின் செயற்பாடுகள் இன்று வழமை போல இயங்கும் என பொது நிர்வாக அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் பின்னணியை கண்டறிய அநுரவுக்கு முக்கிய வாய்ப்பு 12 மணி நேரம் முன்

முத்துவிற்கு தெரியப்போகும் அடுத்த பெரிய உண்மை.. ரோஹினியா, சீதாவா?... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam

பணத்தை விட உறவுகளின் மகிழ்ச்சிக்கு மதிப்பளிக்கும் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

இந்த நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள் துணையை அடக்கியாள்வதில் வல்லவர்கள்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan
