3 பாடசாலைகளுக்கு வழங்கப்பட்டுள்ள விசேட விடுமுறை
ஹல்துமுல்ல பிரதேசத்தில் உள்ள மூன்று பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக ஹல்துமுல்ல பிரதேச கல்விப் பணிப்பாளர் நிலானி தம்மிக்க தெரிவித்துள்ளார்.
சீரற்ற காலநிலையால் விடுமுறை
மழையுடன் கூடிய காலநிலை காரணமாக குறித்த பாடசாலைகளுக்கு இன்றைய தினம் (11.12.2023) விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அந்தந்த பாடசாலைகளில் கல்வி கற்கும் பிள்ளைகள் தங்களுடைய கல்வி நடவடிக்கைகளை இடையூறு இன்றி தொடர்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பண்டாரவளை வலயக் கல்விப் பணிப்பாளர் தம்மிக்க ஹேரத்தின் பணிப்புரைக்கமைய இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மண்சரிவால் ஏற்பட்ட பாதிப்பு
இதேவேளை மண்சரிவினால் பாதிக்கப்பட்டு இன்று மூடப்பட்ட கலிபானவளை உயர்தரப் பாடசாலை மாணவர்கள் வெல்லவாய கம்பஹா மகாவித்தியாலயத்திற்குச் சென்றுள்ளனர்.
பாறைகள் விழும் அபாயம் காரணமாக மூடப்பட்ட பிளாக்வுட் உயர்தரப் பாடசாலை கட்டடம் இடிந்து விழும் அபாயம் காரணமாக, அம்மாணவர்கள் ஹல்துமுல்ல தமிழ் உயர்தரப் பாடசாலைக்குச் சென்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





தமிழ் இன அழிப்பை கட்டமைத்துள்ள இலங்கை அரசாங்கம் 12 மணி நேரம் முன்

சிவன் ஆலயத்திற்காக மோதும் நாடுகள்! மூன்றாம் உலகப்போரின் தொடக்கமா? ஓடித்திரியும் ட்ரம்ப் News Lankasri

இந்தியாவை 100 ஆண்டுகளுக்கு மேல் ஆண்ட கிழக்கிந்திய கம்பெனி - இப்போது உரிமையாளரான இந்தியர் News Lankasri
