கொழும்பில் வேலை செய்யும் பெற்றோர்: 13வயது சிறுமியின் விபரீத முடிவு
தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ட்ருப் (Troup) தோட்டத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் சிறுமியொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
13 வயது சிறுமியொருவரே இவ்வாறு நேற்று (5.05.2023) சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
பொலிஸார் விசாரணை
சிறுமியின் பெற்றோர் கொழும்பில் வேலை செய்வதாகவும், தனது தாத்தா பாட்டியின் பாதுகாப்பிலேயே சிறுமியும் அவரது சகோதரனும் வாழ்ந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் நடைபெற்ற போது வீட்டில் ஒருவரும் இருக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவத்தினமான நேற்று 05.05.2023) போயா தினம் என்பதால், அண்ணன் தங்கை மற்றும் பாட்டியுடன் ஆலயத்திற்குச் செல்ல தயாராகும் போது, அண்ணன் பயன்படுத்தும் கிறீமை தங்கை பயன்படுத்தியுள்ளார்.
இதன்போது அண்ணன் தங்கையிடம். ஏன் எனது கிறீமை போடுகின்றாய் எனக் கேட்டுள்ளார்.
இறந்துள்ளதாக தகவல்
அதன் பின்னர் பாட்டியுடன் அண்ணன் ஆலயத்திற்குச் செல்லும் போது தனது தங்கையையும் அழைத்த போது ஆலய வழிபாட்டில் கலந்துகொள்ள வருவதற்கு மறுத்துள்ளார்.
இதையடுத்து பாட்டியும் அண்ணனும் ஆலயத்திற்குச் சென்று வழிபாட்டினை முடித்து கொண்டு ஆலயத்தில் வழங்கப்பட்ட அன்னதானத்தினை தங்கைக்கும் எடுத்துக்கொண்டு வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தபோது அயலவர்கள் சகோதரி இறந்துள்ளதாக தகவல் வழங்கியுள்ளனர்.
இதனையடுத்து, அண்ணன் மற்றும் பாட்டியும் வீட்டுக்கு வந்த போது தனது தங்கை தூக்கிட்டு இறந்துள்ள விடயம் தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக தலவாக்கலை பொலிஸார் மேற்கொண்ட ஆரம்பக்கட்ட விசாரணையின் போது, தனது தங்கையிடம் எப்போதும் பேசுவது போல் பேசியதாகவும், இறந்த சகோதரியின் அண்ணனிடம் பொலிஸார் மேற்கொண்ட விசாரணையின் போது வாக்கு மூலம் வழங்கியுள்ளார்.
சம்பவம் தொடர்பில் தலவாக்கலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு
வருகின்றனர்.
மேலதிக செய்தி - கிருஷாந்தன்