பாடசாலைக்குச் சென்ற தமிழ் மாணவியை காணவில்லை! பொலிஸ் நிலையத்தை நாடிய தாய்
முல்லைத்தீவு பகுதியில் பாடசாலை சென்ற 15 வயதுடைய மாணவி ஒருவர் காணாமல் போயுள்ளதாக அவரது தாயாரால் மாங்குளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிழவன்குளம் பகுதியைச் சேர்ந்த 15 வயதுடைய தரம் ஒன்பதில் கல்வி கற்கும் மாணவி ஒருவர் கடந்த முதலாம் திகதி பாடசாலைக்கு சென்ற சமயம் காணாமல் போய் இருப்பதாக அவரது தாயாரால் மாங்குளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு
இதுவரை குறித்த சிறுமி தொடர்பான தகவல்கள் எதுவும் தமக்கு கிடைக்கவில்லை என சிறுமியின் தாயார் தெரிவித்துள்ளார்.
தென்பகுதியில் இருந்து குறித்த பிரதேசத்திற்கு வேலைக்காக வந்து தங்கியிருந்த ஒருவரே மேற்படி சிறுமியை கடத்திச் சென்றுள்ளதாகவும் அவரைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் விசாரணைகளை முன்னெடுத்து வரும் மாங்குளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கோபத்தின் உச்சத்தில் குணசேகரன்.. ஜனனி போட்ட மாஸ்டர் பிளான்! பரபரப்பான கட்டத்தில் எதிர்நீச்சல் சீரியல் Cineulagam

பிரித்தானியாவில் புறப்பட்ட சிறிது நேரத்தில் வெடித்துச் சிதறிய விமானம்! உள்ளே இருந்தவர்களின் கதி? News Lankasri

ஆதி குணசேகரனுக்கு இரண்டாவது அடி.. பெண்கள் அதிரடி! எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் அப்டேட் Cineulagam
