பாடசாலை பாடத்திட்டத்தில் ஏற்படவுள்ள மாற்றம்
பாடசாலை பாடத்திட்டத்தில் அடுத்த வருடம் முதல் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படவுள்ளதாக அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
அகில இலங்கை பௌத்த சங்கத்தினால் நடாத்தப்பட்ட புதுப்பிக்கத்தக்க எரிசக்தி கண்காட்சி மற்றும் முதலீட்டு சந்திப்பில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட போது அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.
கல்வி சீர்திருத்தம்
பரீட்சையை மையமாகக் கொண்டு கல்விக்கு பதிலாக திறமைக்கு முன்னுரிமை அளிப்பதே இந்த சீர்திருத்தத்தின் நோக்கமாகும். இதன்மூலம் புதிய படைப்பாளர்களை உருவாக்குவதே இதன் நோக்கம் என அமைச்சர் தெரிவித்தார்.
இதேவேளை 2022ஆம் ஆண்டிற்கான ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை எதிர்வரும் டிசம்பர் மாதம் 4ஆம் திகதி நடைபெறவுள்ளது.
புலமைப்பரிசில் பரீட்சை
கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை எதிர்வரும் டிசம்பர் மாதம் 5ஆம்
திகதி தொடக்கம் ஜனவரி மாதத்தின் முதல் வாரம் வரை நடைபெறவுள்ளது.