வடக்கு மாகாணத்தில் பாடசாலை இடைவிலகல் சடுதியாக அதிகரிப்பு! பணிப்பாளர் வெளியிட்ட தகவல்

Sri Lanka Economic Crisis Sri Lanka
By Rakesh Oct 25, 2022 05:54 PM GMT
Report

கோவிட் பெருந்தொற்றுக் காலத்தின் பின்னர் வடக்கு மாகாணத்தில் பாடசாலைகளிலிருந்து இடைவிலகும் மாணவர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துள்ளது.

2020ஆம் ஆண்டு 485ஆகவும், 2021ஆம் ஆண்டு ஆயிரத்து 105 ஆகவும், இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் வரையில் 519 ஆகவும் இடைவிலகிய மாணவர்கள் எண்ணிக்கை உள்ளது என்று வடக்கு மாகாண கல்வித் திணைக்களம் வழங்கிய தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் ஊடாக வடக்கு மாகாண கல்வித் திணைக்களத்திடம் கோரிய தகவல்களில் இவ்விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

மேலும் குறிப்பிடப்பட்டதாவது, 

பாடசாலை இடைவிலகல் 

வடக்கு மாகாணத்தில் பாடசாலை இடைவிலகல் சடுதியாக அதிகரிப்பு! பணிப்பாளர் வெளியிட்ட தகவல் | School Dropout Rate On The Rise Northern Province

2020ஆம் ஆண்டு வடக்கு மாகாணத்தில் ஆகக்கூடுதலாக மடுக்கல்வி வலயத்தில் 94 பேர் பாடசாலையிலிருந்து இடைவிலகியுள்ளனர்.

மன்னார் கல்வி வலயத்தில் 72 பேரும், கிளிநொச்சி தெற்கு கல்வி வலயத்தில் 52 பேரும், கிளிநொச்சி வடக்கு கல்வி வலயத்தில் 51 பேரும், முல்லைத்தீவு கல்வி வலயத்தில் 48 பேரும் இடைவிலகியுள்ளனர்.

அதிகளவில் ஆண்களே இடைவிலகியுள்ளதுடன் 10ஆம் மற்றும் 11ஆம் தரங்களைச் சேர்ந்தவர்களே இதில் அதிகமாகவும் உள்ளனர்.

2021ஆம் ஆண்டு வடக்கு மாகாணத்தில் ஆகக் கூடுதலாக கிளிநொச்சி தெற்கு கல்வி வலயத்தில் 181 பேர் பாடசாலையிலிருந்து இடைவிலகியுள்ளனர்.

வலிகாமம் கல்வி வலயத்திலிருந்து 148 பேரும், மன்னார் கல்வி வலயத்திலிருந்து 135 பேரும், கிளிநொச்சி வடக்கு கல்வி வலயத்திலிருந்து 119பேரும் இடைவிலகியுள்ளனர்.

இந்த ஆண்டின் ஏப்ரல் மாதம் வரையில் வடக்கு மாகாணத்தில் ஆகக் கூடுதலாக வலிகாமம் கல்வி வலயத்தில் 123 பேர் பாடசாலையிலிருந்து இடைவிலகியுள்ளனர்.

வவுனியா வடக்கு கல்வி வலயத்தில் 110பேரும், மன்னார் கல்வி வலயத்தில் 101பேரும் இடைவிலகியுள்ளனர்.

வறுமை

வடக்கு மாகாணத்தில் பாடசாலை இடைவிலகல் சடுதியாக அதிகரிப்பு! பணிப்பாளர் வெளியிட்ட தகவல் | School Dropout Rate On The Rise Northern Province

கோவிட் பெருந்தொற்றின் பின்னரான அதிகரித்த இடைவிலகல்களுக்கான காரணம் தொடர்பில் வடக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் செ.உதயகுமாரிடம் வினவியபோது,

"வறுமையும் இதற்குப் பிரதான காரணம். அதனை விட கோவிட் காலத்தில் பாடசாலைகளுடன் தொடர்பில்லாது நீண்ட காலம் இருந்தமையால் மாணவர்கள் தொழில்களை நாடிச் சென்ற சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன. சில பெற்றோர் தமது பெண் பிள்ளைகளுக்கு திருமணமும் செய்து வைத்துள்ளனர்" என்றும் குறிப்பிட்டுள்ளார். 

10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புலோலி, Montreal, Canada

22 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

18 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு, கொக்குவில், வவுனியா, திருகோணமலை, கொழும்பு

22 Apr, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
30ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், கொழும்பு, திருகோணமலை

23 Apr, 1996
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
நன்றி நவிலல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மட்டக்குளி

25 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, கிளிநொச்சி, London, United Kingdom

23 Apr, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தொல்புரம் கிழக்கு

23 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US