பாடசாலைகளை நடத்துவது குறித்து கல்வி அமைச்சின் தீர்மானம்! சற்றுமுன் வெளியான அறிவிப்பு
இலங்கையில் பாடசாலைகளை நடத்துவது தொடர்பில் கல்வி அமைச்சு எடுத்துள்ள தீர்மானம் தொடர்பான அறிவிப்பொன்று சற்றுமுன் வெளியாகியுள்ளது.
அதன்படி நாட்டிலுள்ள அனைத்து அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற பாடசாலைகளையும் எதிர்வரும் திங்கட்கிழமை அதாவது எதிர்வரும் 15ஆம் திகதி முதல் வாரத்தின் ஐந்து நாட்களிலும் வழமையான நேரத்தில் (காலை 7.30 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை) நடத்துவதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.
அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கான போக்குவரத்துச் சிரமங்கள் இருப்பின் போக்குவரத்துத் திட்டத்தைத் தயாரிக்குமாறு அனைத்து மாகாண அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.
அத்துடன் எதிர்வரும் மூன்று மாதங்களில் பாடசாலை நேரத்தை பாடங்களை கற்பிப்பதற்காக பயன்படுத்த வேண்டும் எனவும், பாடசாலை நேரத்திற்கு பின்னர் பாடநெறி மற்றும் பாடநெறிக்கு புறம்பான செயற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் எனவும், பாடசாலைகளில் நடைபெறும் விழாக்கள் போன்றவற்றை கட்டுப்படுத்த வேண்டும் எனவும் கல்வி அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது.
பாடசாலைகள் மூடப்படுமா..!
அத்துடன் நாட்டில் கோவிட் தொற்று தற்போது அதிகரித்து வரும் நிலையில், பாடசாலைகள் தொடர்ந்து நடத்தப்படுமா என்பது குறித்து கல்வி அமைச்சர் முன்னதாக தெளிவுப்படுத்தியிருந்தார்.
அதன்படி கோவிட் தொற்று பரவினாலும் பாடசாலைகள் மீள மூடப்படாது என அமைச்சர் குறிப்பிட்டிருந்தார்.
மேலும், மாணவரொருவர் கோவிட் தொற்றுக்கு உள்ளானால், அவருடன் தொடர்பில் இருந்தவர்களை தனிமைப்படுத்திவிட்டு, கற்பித்தல் செயற்பாடுகளை தொடர்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
பாடசாலை நடத்தப்படும் நாட்களில் மாற்றம் |


சரிகமப சீசன் 5 போட்டியாளர்களுக்கு மாபெரும் பரிசுத் தொகை அறிவிப்பு... இத்தனை லட்சத்தில் வீடா? Cineulagam

ரூ.45,000க்கும் குறைவான விலையில் Hero electric scooter வாங்கலாம்.., குறுகிய கால சலுகை மட்டுமே News Lankasri

SBI Special FD திட்டத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால்.., 3 ஆண்டுகளில் திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு? News Lankasri
