அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை! கல்வி அமைச்சின் இறுதி அறிவிப்பு வெளியானது
அரச தரம் மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற அனைத்து தனியார் பாடசாலைகளுக்கும் எதிர்வரும் 7ஆம் திகதி முதல் விடுமுறை வழங்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.
குறித்த பாடசாலைகளின் அனைத்து வகுப்புகளுக்கும் இவ்வாறு விடுமுறை வழங்கப்படவுள்ளது.
அதன்படி, மார்ச் 7ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும். க.பொ.த உயர்தரப் பரீட்சையை நடாத்துவதற்காக இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்கு முன்னர் ஆரம்ப வகுப்புக்களைத் தவிர ஏனைய அனைத்து வகுப்புக்களுக்கும் விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டிருந்தது.
எனினும், குறித்த நடவடிக்கைக்கு இலங்கை ஆசிரியர் சங்கம் எதிர்ப்பு வெளியிட்டிருந்தது.
இந்த நிலையில், தற்போது அனைத்து வகுப்புக்களுக்கும் விடுமுறை வழங்குவது தொடர்பான கல்வி அமைச்சின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ரஷ்யாவிற்காக வேறு நாட்டில் நாசவேலையில் இறங்கிய உக்ரேனியர்கள்: பகிரங்கப்படுத்திய பிரதமர் News Lankasri