பாடசாலை அனுமதியின் போதான அநீதிகள்: பிரதமர் வெளியிட்ட அறிவிப்பு
மாணவர்களை பாடசாலைக்கு அனுமதிக்கும் போது ஏதேனும் அநீதி நடந்தால் கல்வி அமைச்சுக்கு அறிவிக்குமாறும் பிரதமர் ஹரிணி அமரசூரிய அறிவித்துள்ளார்.
தொடங்கொட பிரதேசத்தில் நேற்று(23) இடம்பெற்ற பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அரசியல்வாதிகள், அரச அதிகாரிகள் மற்றும் அதிபர்கள் ஆகியோர் பாடசாலை அனுமதிகளை பயன்படுத்தி பணம் சம்பாதிக்கும் காலம் முடிந்துவிட்டதாக பிரதமர் இதன்போது கூறியுள்ளார்.
புதிய அரசியல் கலாசாரம்
அத்துடன், இந்த புதிய அரசியல் கலாசாரம் அனைத்து மட்டங்களிலும் நிகழ வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், ஜனாதிபதி, நாடாளுமன்றம், அமைச்சரவை மற்றும் உள்ளூராட்சி நிறுவனங்களில் மாற்றம் ஏற்படவில்லை என்றால் இதனை நடைமுறைக்கு கொண்டுவர முடியாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

மகாநதி சீரியலில் அடுத்து விஜய்க்கும், வெண்ணிலாவிற்கும் திருமணம் நடக்கப்போகிறதா?.. படப்பிடிப்பு தள போட்டோ Cineulagam

Baakiyalakshmi: தூக்கி வீசப்பட்ட மாமனார் புகைப்படம்! சுதாகருக்கு பாக்கியா விடுத்த எச்சரிக்கை Manithan

தனக்கு இப்படி நடந்தது எப்படி, அதனை கண்டுபிடித்த ஆனந்தி.. சிங்கப்பெண்ணே சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam

காஷ்மீர் தாக்குதலில் திருமணமான 7 நாளில் உயிரிழந்த கணவர்.., தம்பதியினர் கடைசியாக எடுத்த வீடியோ வைரல் News Lankasri

viral video: சிறுவனின் மடியில் ஒய்யாரமாக ஓய்வெடுக்கும் ராட்சத மலைப்பாம்பு! மெய்சிலிர்க்கும் காட்சி Manithan
