புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியீடு
2024ஆம் ஆண்டுக்கான தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகள் சற்று முன்னர் இணையத்தில் வெளியாகின.
பரீட்சைகள் திணைக்களம் இதனை அறிவித்துள்ளது.
பெறுபேறுகளை பார்வையிட...
இதன்படி, இலங்கைப் பரீட்சைத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ வலைத்தளமான www.doenets.lk இணையத்தளத்தில் பெறுபேறுகளைப் பார்வையிட முடியும்.
இதேவேளை, 2024ஆம் ஆண்டுக்கான தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சை கடந்த செப்டம்பர் மாதம் 15ஆம் திகதி நடைபெற்றது.
இதில் 244,092 மாணவர்கள் சிங்கள மொழி மூலமும், 79,787 மாணவர்கள் தமிழ் மொழி மூலமும் என மொத்தம் 323,879 மாணவர்கள் தோற்றியிருந்தனர்.
மேலும், இந்த பரீட்சை வினாத்தாளில் 3 வினாக்கள் வெளியில் கசிந்தமை தொடர்பில் பல்வேறு சர்ச்சை நிலைகள் ஏற்பட்டிருந்ததுடன், நீதிமன்றத்திலும் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இதனையடுத்து, பரீட்சை வினாத்தாள் மதிப்பீடு நடவடிக்கைகளிலும் இது பாரிய தாக்கத்தை செலுத்தியிருந்த நிலையில், பல்வேறு சர்ச்சை மற்றும் குழப்பங்களுக்கு மத்தியில் பரீட்சை மதிப்பீடுகள் நடத்தப்பட்டு பெறுபேறுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

மூன்றாம் உலகப்போர் வெடித்தால்... பிரான்சுடன் அணு ஆயுத ஒப்பந்தம் செய்துகொள்ளும் பிரித்தானியா News Lankasri

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: இந்திய உச்சநீதிமன்றத்தின் முடிவு News Lankasri

SBI Special FD திட்டத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால்.., 3 ஆண்டுகளில் திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு? News Lankasri
