யானை - மனித மோதலைக் கட்டுப்படுத்த இரண்டு மாதிரித் திட்டங்கள்

Sri Lankan Peoples Elephant
By Rakesh May 21, 2024 06:02 PM GMT
Report

காட்டு யானை - மனித மோதல் அதிகம் உள்ள கிராமங்கள் மற்றும் விளைநிலங்களைப் பாதுகாக்க, தற்காலிக விவசாய மின் வேலி மற்றும் கிராம மின் வேலி என்ற இரண்டு மாதிரித் திட்டங்களைத் தொடங்க அரசு திட்டமிட்டுள்ளது.

காட்டு யானை - மனித மோதல்களைக் கட்டுப்படுத்த அண்மைக்காலமாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பில் தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க தலைமையில் துறைசார் நிறுவனங்களின் தலைவர்களுடன் நேற்று நடைபெற்ற கலந்துரையாடலில் இது தொடர்பில் அறிவிக்கப்பட்டது.

யானை - மனித மோதலைக் கட்டுப்படுத்த இரண்டு மாதிரித் திட்டங்கள் | Schemes To Control Elephant Human Conflict

இங்கு யானை – மனித மோதல்கள் அதிகம் உள்ள பகுதிகளில் இந்த மோதல்களைக் கட்டுப்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டு பராமரிக்கப்படும் மின்சார வேலிக்கு மேலதிகமாக, மோதல்கள் அதிகம் இடம்பெறும் மாவட்டங்களில் தெரிவு செய்யப்பட்ட பிரதேச செயலகப் பிரிவுகளில் முன்னோடித் திட்டமாக விவசாய நிலங்களைப் பாதுகாக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அறுவடை மேற்கொள்ளப்படும் சமயம் வரை மாத்திரம் உரிய விவசாய நிலங்களைப் பாதுகாக்க தற்காலிக விவசாய மின்வேலி அமைப்பதில் கவனம் செலுத்தப்பட்டது.

மின்வேலிக்கான முன்னோடித் திட்டம் 

மேலும், காட்டு யானை - மனித மோதல்கள் அதிகம் உள்ள கிராமங்களைப் பாதுகாக்கும் வகையில் கிராமத்தைச் சுற்றி அமைக்கப்படவுள்ள மின்வேலிக்கான முன்னோடித் திட்டம் தொடர்பிலும் விரிவாக ஆராயப்பட்டது.

யானை - மனித மோதலைக் கட்டுப்படுத்த இரண்டு மாதிரித் திட்டங்கள் | Schemes To Control Elephant Human Conflict

மேலும், சம்பந்தப்பட்ட விவசாயிகள் விவசாய பணிகளைத் தொடங்கும் நேரத்தில் அறுவடை செய்த பின் விவசாய மின் வேலியை அகற்ற வேண்டும் எனவும், மின்வேலியின் பராமரிப்பு மற்றும் பொறுப்பை கமநல அபிவிருத்தி திணைக்களத்திற்கு வழங்குவதுடன், கிராம வேலியின் பொறுப்பு மற்றும் பராமரிப்பு பணிகளை அந்தந்த பிரதேச செயலகங்களுக்கு வழங்குவது எனவும் கலந்துரையாடலில் தீர்மானிக்கப்பட்டது.

பல்வேறு கலாசார நிகழ்வுகள் மற்றும் பெரஹரா என்பவற்றுக்காக யானைகளை வழங்குகையில் தனியாரிடமுள்ள யானைகளுக்கு மேலதிகமாக, பழக்கப்பட்ட யானைகளைக் கொண்ட பட்டியலொன்றைப் பேணுவது குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.

யானை - மனித மோதலைக் கட்டுப்படுத்த இரண்டு மாதிரித் திட்டங்கள் | Schemes To Control Elephant Human Conflict

இந்தத் தீர்மானங்களை அமுல்படுத்துவதில் எழும் சிக்கல்கள் தொடர்பான விரிவான அறிக்கையொன்றை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்குக் கையளிப்பதற்காகத் தயார்படுத்துமாறும் சாகல ரத்தாயக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குப் பணிப்புரை வழங்கினார்.

வனஜீவராசிகள் மற்றும் வனவளப் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் குணதாச சமரசிங்க மற்றும் துறைசார் நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் காட்டு யானைகள் மனிதக் கட்டுப்பாட்டுக் குழுவின் உறுப்பினர்களான கலாநிதி சுமித் பிலபிட்டிய, கலாநிதி பிரிதிவிராஜ் பெர்னாண்டோ ஆகியோரும் இந்தக் கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.

லண்டனில் இருந்து 211 பயணிகளுடன் சிங்கப்பூர் சென்ற விமானத்திற்கு நேர்ந்த கதி! பலர் படுகாயம்

லண்டனில் இருந்து 211 பயணிகளுடன் சிங்கப்பூர் சென்ற விமானத்திற்கு நேர்ந்த கதி! பலர் படுகாயம்

ராஜீவ் காந்தியை கொலை செய்தது தமிழீழ விடுதலைப்புலிகளின் மிகப்பெரிய தவறு : இந்திய ஊடகம்

ராஜீவ் காந்தியை கொலை செய்தது தமிழீழ விடுதலைப்புலிகளின் மிகப்பெரிய தவறு : இந்திய ஊடகம்


நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW 


1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, பெரியதம்பனை, முதலியார்குளம், திருநாவற்குளம்

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பூநகரி, துணுக்காய்

24 Jul, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், சுண்டிக்குளி, Toronto, Canada, New Jersey, United States

17 Aug, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
நன்றி நவிலல்

சுருவில், Frankfurt, Germany

20 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், நீர்வேலி, Scarborough, Canada

20 Aug, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கன்னாதிட்டி, Brampton, Canada

20 Aug, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

17 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

இணுவில், பாஷையூர், முன்ஸ்ரர், Germany

15 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Brampton, Canada, யாழ்ப்பாணம்

20 Aug, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Mississauga, Canada

18 Aug, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கனடா, Canada

18 Aug, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, கரம்பொன் தெற்கு, கொழும்பு 15

19 Aug, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

19 Aug, 2022
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, புதுக்குடியிருப்பு 4ம் வட்டாரம்

17 Aug, 2021
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US