ஷிரந்தியின் கைதில் நான் சந்தோச படமாட்டேன்: அர்ச்சுனா எம்.பி பகிரங்கம்
ஷிரந்தி ராஜபக்ச மற்றும் நாமல் ராஜபக்ச ஆகியோரின் கைது விவகாரத்தில் தமிழ் மக்கள் சந்தோசம் அடைகின்றனர்.ஆனால் தான் ஒருபோதும் இந்த விடயத்தில் சந்தோசம் அடைய மாட்டேன் என நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார்.
தற்போதைய அரசாங்கத்தின் நடவடிக்கைகள் குறித்து இன்றையதினம்(08.10.2026) நாடாளுமன்றில் உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
மகிந்த ராஜபக்சவின் சந்ததியை கைது செய்து சிறையில் அடைத்து மக்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்ததற்காக நாங்கள் சந்தோசம் அடைகின்றோம்.ஆனால் நான் இதனை என் மனதில் இருந்து சொல்லவில்லை.
நமது டயஸ்போராக்களிடம் இருந்து நீங்கள் பெரும் பணத்தை பெற்றுக் கொண்டு பெரிய சந்தோசத்தை பெற்றுக் கொடுத்துள்ளீர்கள்.இதனால் உண்மையிலேயே நான் உங்களை மதிக்கின்றேன்.
மீதமாக கோட்டாபய ராஜபக்ச தான் வெளியே உள்ளார்.அவரையும் சிறையில் அடைத்து விடுங்கள் எனத் தெரிவித்துள்ளார்.
தேர்தல் களத்தில் கடும் நெருக்கடி... ஈரான் மீது மீண்டும் தாக்குதலுக்குத் தயாராகும் ட்ரம்ப் News Lankasri