சிரந்தியைத் தொடர்ந்து அநுரவின் அடுத்த வேட்டை : நாமலுடன் அர்ச்சுனா செய்த டீல்
தமிழ் தேசிய அரசியல் ஓட்டத்திலே எப்பொழுதும் வைத்தியர்களின் பங்களிப்பு கணிசமாக இருப்பதை அவதானித்த தமிழ் தேசியத்தை எதிர்க்கின்ற சிங்களத் தரப்பு அர்ச்சுனா இராமநாதனை இந்த அரசியலுக்கு உள் இழுத்ததாக சட்டத்தரணி உமாகரன் இராசையா குறிப்பிட்டுள்ளார்.
ஐபிசி தமிழின் சக்கரவியூகம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மக்களுக்கு எது தேவையானதோ அதை எதிரணியிடம் இருந்து பெற்றுக் கொடுப்பதில்தான் ஜனநாயக ரீதியிலான ஒரு அரசியல்வாதியின் வெற்றி இருக்கின்றது.
இந்நிலையில், அண்மையில் விடுதலைப்புலிகள் மீதான தடை நீக்கப்பட வேண்டும் என்ற தொனிப்பொருளிலே நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் உரையாற்றியிருந்தார்.
ஆனால் அதை நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் சிறீதரனின் கருத்துக்கள் இனங்களுக்கு இடையே முறுகலை ஏற்படுத்துவதாக குறிப்பிட்டிருந்தார்.
இந்த விடயங்கள் தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது கீழ்வரும் காணொளி.....