சுகாதார அமைச்சு மக்களுக்கு விடுத்துள்ள அவசர எச்சரிக்கை
சுகாதார அமைச்சின் செயலாளர் டொக்டர் பாலித மஹிபாலவின் பெயரை பயன்படுத்தி மோசடிகள் இடம்பெற்று வருவதாக சுகாதார அமைச்சு மக்களுக்கு அவசர எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது.
சுகாதார அமைச்சின் செயலாளரது பெயரை பயன்படுத்தி சிலர் மோசடியான முறையில் பணம் திரட்டி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதிகாரபூர்வமான முறையில் இவ்வாறு பணம் திரட்டப்படவில்லை என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

பொலிஸாருக்கு அறிவிக்குமாறு அறிவித்தல்
எனவே இவ்வாறான கோரிக்கைகளை நம்பி நன்கொடைகளை வழங்க வேண்டாம் என பொதுமக்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
நன்கொடை வழங்குமாறு கோரப்பட்டால் அது குறித்து பொலிஸாருக்கு அறிவிக்குமாறு சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
மக்கள் விழிப்புணர்வுடன் இருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள வேண்டுமென சுகாதார அமைச்சு தனது அதிகாரபூர்வ எக்ஸ் தளத்தில் தகவல் வெளியிட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
பிரச்சனைகளுக்கு இடையில் ஒன்றாக இணைந்துள்ள மீனா, ஸ்ருதி, ரோஹினி... என்ன விஷயம், சிறகடிக்க ஆசை சீரியல் வீடியோ Cineulagam
அந்த மாதிரி விஷயங்களில் நான் சிக்க விரும்பவில்லை... பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகர் ஓபன் டாக் Cineulagam
ஈரானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறும்: போர் இறுதிக் கட்டத்தை எட்டி விட்டதாக டிரம்ப் அறிவிப்பு News Lankasri
அடுத்தடுத்த கேள்விகள் கேட்ட கோமதி, அதிரடி முடிவு எடுத்த பாண்டியன்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam