இஸ்ரேலில் வேலைவாய்ப்பு தொடர்பில் அதிகரிக்கும் மோசடிகள்
இஸ்ரேல்(Israel) நாட்டில் கைநிறைய சம்பளத்துடன் வேலைவாய்ப்புகளைப் பெற்றுத் தருவதாக நம்ப வைத்து மேற்கொள்ளப்படும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடிகள் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியக அதிகாரிகளின் புகைப்படங்களைப் பயன்படுத்தி வெளிநாடுகளில் வேலை வாய்ப்புக்களைப் பெற்றுத் தருவதாக மோசடி நபர்கள் சிலர் இவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுத்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
வேலைவாய்ப்பு
அவ்வாறானவர்களிடம் ஏராளமான பொதுமக்கள் பெரும் தொகைப் பணத்தை செலுத்தி, அதன் பின்னர் வேலைவாய்ப்பு பெற்றுக் கொள்ள முடியாமலும், பணத்தைத் திரும்ப பெறமுடியாமலும் ஏமாற்றப்பட்டுள்ளனர்.
பெரும்பாலும் போலி வட்சப் கணக்குகளை உருவாக்கி, இஸ்ரேலில் வேலை வழங்குவதாக கூறி இந்த நிதி மோசடி மேற்கொள்ளப்படுவதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அறிக்கையொன்றின் ஊடாக பொதுமக்களை எச்சரித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பதினாறாவது மே பதினெட்டு 2 நாட்கள் முன்

Brain Teaser Challenge: மனதை குழப்பும் புதிர்- 7 வினாடியில் திருடனின் மனைவியை கண்டுபிடிக்க முடியுமா? Manithan
