சுசில் பிரேமஜயந்தவின் ராஜாங்க அமைச்சு பதவி எஸ்.பி.திஸாநாயக்கவுக்கு
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் சுசில் பிரேமஜயந்த(Susil Premajayantha )வகித்து வந்த கல்வி மறுசீரமைப்பு, திறந்த பல்கலைக்கழகம், தொலைக்கல்வி ஊக்குவிப்பு ராஜாங்க அமைச்சு பதவி எஸ்.பி.திஸாநாயக்கவுக்கு (S.B.Dissanayake) வழங்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
எஸ்.பி.திஸாநாயக்க தற்போது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகித்து வருகிறார்.
ராஜாங்க அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட சுசில் பிரேமஜயந்த அண்மைய காலமாக அரசாங்கத்தின் செயற்பாடுகளை கடுமையாக விமர்சித்து வந்தார்.
நாட்டின் பிரச்சினைகள் தீர்க்க முடியாத அளவுக்கு புரையோடி போயுள்ளதாகவும் வேறு ஒரு அணியிடம் நாட்டை ஒப்படைத்தாலேயே நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப முடியும் எனவும் சுசில் பிரேமஜயந்த கூறியிருந்தார்.
தொடர்புடைய செய்தி....
பதவியிலிருந்து நீக்கப்பட்ட அமைச்சர்! - ஜனாதிபதி அதிரடி நடவடிக்கை
வடக்கில் சீனர்களின் ஆதிக்கம்! - கடும் நடவடிக்கைகளுக்கு தயாராகும் ஜனாதிபதி (பத்திரிக்கை கண்ணோட்டம்) |
செங்கடல் முற்றுகையை எதிர்த்து புதிய கடற்படைக் கூட்டணி: அமெரிக்காவை நம்பாத வளைகுடா நாடுகள் News Lankasri