ஜனாதிபதியின் சரியான தீர்மானம்: பல மில்லியன் டொலர்கள் சேமிப்பு
அரிசி இறக்குமதிக்காக இலங்கை வருடாந்தம் செலவிட்ட 350மில்லியன் ரூபா தற்போது சேமிக்கப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு இவ்வாறு தெரிவித்துள்ளார், தொடர்ந்தும் கருத்து வௌியிட்ட அவர்,
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் சரியான தீர்மானங்களினால் அரிசி இறக்குமதிக்காக அரசாங்கம் செலவிட்ட 350 மில்லியன் அமெரிக்க டொலர் தொகையை சேமிக்க முடிந்துள்ளது.
அதிகபட்ச விலையை காட்சிப்படுத்துவது கட்டாயம்
நுகர்வோரை பாதுகாக்கும் நோக்கில் 20 வருடங்கள் பழமையான நுகர்வோர் அதிகார சபை சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அரசாங்கத்தின் வரிச்சலுகைகளைப் பெற்று மக்களுக்கு நிவாரணம் வழங்காத அத்தியாவசியமற்ற உணவுப் பொருட்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
இந்நாட்டில் விற்பனை செய்யப்படும் ஒவ்வொரு பொருளின் அதிகபட்ச விலையையும் காட்சிப்படுத்துவது கட்டாயம்.
அவ்வாறு செய்யாத நிறுவனங்கள் மற்றும் உற்பத்தியாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் எச்சரித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |