அந்நியச் செலாவணியைச் சேமிக்க நாடளாவிய ரீதியில் வேலைத்திட்டம்! இராஜாங்க அமைச்சர்

Ranil Wickremesinghe Sri Lanka Economic Crisis Sri Lanka Food Crisis Economy of Sri Lanka
By Rakesh Oct 05, 2023 06:36 PM GMT
Report

தானிய இறக்குமதிக்காக அரசு செலவழிக்கும் அந்நியச் செலாவணியைச் சேமிக்கும் நோக்கத்தில், கிராமியப் பிரதேசங்களில் பயிர்ச்செய்கையில் ஈடுபட்டுள்ள மக்களுக்கு, தானிய வகைகளைப் பயிரிடுவதற்கு அவசியமான விதைகளை வழங்குவதுடன் அவற்றுக்கான சந்தை வாய்ப்புகளைப் பெற்றுக்கொடுக்கவும் தேவையான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக கிராமியப் பொருளாதார இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான் தெரிவித்தார்.

மன்னார் மாவட்டத்தை மையமாக வைத்து வெற்றிகரமாக ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த வேலைத்திட்டத்தை, எதிர்காலத்தில் நாடு பூராகவும் பரவலாக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (05) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும் போதே அமைச்சர் காதர் மஸ்தான் இவ்வாறு தெரிவித்தார்.

உலக நாடுகள் இரண்டாம் தர பிரஜைகளாக நினைக்க ரணிலும் ஒரு காரணம்! கடும் தொனியில் சாணக்கியன் சாடல்

உலக நாடுகள் இரண்டாம் தர பிரஜைகளாக நினைக்க ரணிலும் ஒரு காரணம்! கடும் தொனியில் சாணக்கியன் சாடல்

பொருளாதார நெருக்கடி

இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த இராஜாங்க அமைச்சர், “பாரிய சிக்கலில் இருந்த நாட்டைப் பொறுப்பேற்க எவரும் முன்வராத நேரத்தில் , ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அந்த சவால்மிக்க பொறுப்பை ஏற்றுக்கொண்டார்.

அந்நியச் செலாவணியைச் சேமிக்க நாடளாவிய ரீதியில் வேலைத்திட்டம்! இராஜாங்க அமைச்சர் | Save Foreign Exchange Across The Country

அத்துடன் கடந்த காலங்களில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்பதற்காக பல்வேறு வேலைத்திட்டங்களையும் முன்னெடுத்து வருகின்றார்.

அந்த வேலைத்திட்டங்களினால் தற்போது இந்நாடு படிப்படியாக முன்னேறி வருகின்றது. இதற்காக நாம் அனைவரும் ஜனாதிபதிக்கு நன்றி தெரிவிக்க வேண்டும். மேலும் அவர் முன்னெடுக்கும் வேலைத்திட்டங்களுக்கு எமது ஒத்துழைப்பையும் வழங்க வேண்டும்.

அந்த வகையில் எமது அமைச்சு, கிராமிய பொருளாதாரத்தை வலுவூட்டுவதற்காக பல்வேறு வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகின்றது. குறிப்பாக கிராமிய மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கான பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன.

ஜப்பானில் 6.6 ரிக்டர் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு

ஜப்பானில் 6.6 ரிக்டர் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு

முக்கியமாக விவசாயத்தை ஊக்குவிப்பதன் மூலம் நாட்டின் பொருளாதார மேம்பாட்டுக்கு கிராமிய மக்களின் பங்களிப்பையும் பெற்றுக் கொள்ளும் நோக்கில் பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகின்றோம். கிராமிய பிரதேசங்களில் பயிர்ச்செய்கையில் ஈடுபட்டுள்ள மக்களுக்கு அவசியமான விதைகளை வழங்க நாம் நடவடிக்கை எடுத்துள்ளோம்.

அந்நியச் செலாவணி

குறிப்பாக உழுந்து, பயறு ஆகிய தானிய வகைகளை பயிரிடுவதற்கு அவசியமான விதைகளை வழங்குவதுடன் அவற்றுக்கான சந்தை வாய்ப்புகளை பெற்றுக்கொடுக்கவும் தேவையான நடவடிக்கைகளை எடுத்துள்ளோம். இதன் மூலம் இம்முறை மன்னார் மாவட்டத்தில் சுமார் 950 மெட்ரிக் தொன் பயறு விளைச்சலைப் பெற்றுக்கொள்ள முடிந்துள்ளது.

அந்நியச் செலாவணியைச் சேமிக்க நாடளாவிய ரீதியில் வேலைத்திட்டம்! இராஜாங்க அமைச்சர் | Save Foreign Exchange Across The Country

இதன் ஊடாக பயறு இறக்குமதிக்கு நாம் செலவிடும் அந்நியச் செலாவணியை சேமிக்க முடிந்துள்ளது. இவ்வேலைத்திட்டத்தை நாட்டில் பரவலாக்குவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், ஆடு வளர்ப்புக்கு அவசியமான உதவிகளையும் நாம் வழங்கியுள்ளோம். முக்கியமாக காப்புறுதி வேலைத்திட்டத்துடன் இணைந்த வகையில் ஆடுகளை வழங்கி வைப்பதனால் ஆடு வளர்ப்பின்போது ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்கவும் முடிந்துள்ளது.

சிறிய அளவில் கிராமிய மட்டத்தில் ஆடுகள் வளர்ப்பவர்களை சுமார் 3 அல்லது 4 ஆண்டுகளில் ஆட்டுப் பண்ணையாளர்களாக மாற்றுவதற்கு அவசியமான வேலைத்திட்டங்களை இதன் மூலம் முன்னெடுக்க முடியும். “ஹத பிம” அதிகார சபையின் ஊடாக பயிர்ச்செய்கைக்கு அவசியமான மரக்கன்றுகளை வழங்கி வைக்கும் வேலைத்திட்டமும் முன்னெடுக்கப்படுவதோடு, கோழி வளர்ப்புக்காக கோழிக் குஞ்சுகளையும் கிராமி மக்களுக்கு வழங்குகின்றோம்.

இலங்கைக்கும் இந்தியாவிற்குமான பரீட்சார்த்த கப்பல் போக்குவரத்து நாளை முதல் ஆரம்பம்!

இலங்கைக்கும் இந்தியாவிற்குமான பரீட்சார்த்த கப்பல் போக்குவரத்து நாளை முதல் ஆரம்பம்!

மேலும், இளைஞர் விவசாய கிராமங்களை உருவாக்கும் பணிகளும் எமது அமைச்சின் ஊடாக பல்வேறு பகுதிகளில் நடைபெற்றுவருகின்றன. இதற்காக ஏனைய அமைச்சுகளின் ஒத்துழைப்புகளையும் பெற்றுக்கொண்டுள்ளோம். இதன் மூலம் குறித்த கிராமத்தை பொருளாதார ரீதியில் அனைத்து துறைகளிலும் தன்னிறைவு அடைந்த கிராமமாக முன்னேறுவதற்கு அவசியமான வகையில் எமது வேலைத்திட்டங்களை முன்னெடுக்கின்றோம்.

விவசாய நடவடிக்கை

கடந்த காலங்களில் ஏற்பட்ட குறைபாடுகளைத் தவிர்த்து கிராமிய மக்களுக்கு அவசியமான விடயங்களை அவர்களுடன் கலந்துரையாடி, அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கான மிகச்சரியான தீர்மானங்களையும் திட்டங்களையும் நடைமுறைப்படுத்த  தேவையான வேலைத்திட்டங்களை செயற்படுத்தி வருகின்றோம்.

அந்நியச் செலாவணியைச் சேமிக்க நாடளாவிய ரீதியில் வேலைத்திட்டம்! இராஜாங்க அமைச்சர் | Save Foreign Exchange Across The Country

அதேபோன்று பொருளாதார மத்திய நிலையங்களை உருவாக்கவும், ஏற்கனவே நிர்மாணிப் பணிகள் நிறைவடைந்து இதுவரை மக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்படாமல் உள்ள பொருளாதார மத்திய நிலையங்களை மிக விரைவில் திறந்து வைப்பதற்கான நடவடிக்கைகளையும் முன்னெடுத்துள்ளோம்.

விவசாய நடவடிக்கைகளுக்கு நீரைப் பெற்றுக்கொள்ளும் கிராமிய பிரதேசங்களில் உள்ள குளங்கள், கால்வாய்களை புனர்நிர்மாணம் செய்வதற்கும் தேவையான நிதி ஒதுக்கீடுகளையும் ஜனாதிபதி வழங்கி வைத்துள்ளதுடன், தற்போது நாடு எதிர்நோக்கும் பொருளாதார நெருக்கடி மிக்க சூழ்நிலையிலும் கூட ஏற்கனவே ஒதுக்கப்பட்ட நிதிகளை மீளப்பெறாமல் விவசாயிகளைப் பாதுகாத்து அவர்களின் வாழ்வாதாரத்தை வலுவூட்டுவதற்கு அவசியமான திட்டங்களை முன்னெடுக்க ஜனாதிபதி வழங்கும் ஆதரவையும் இங்கு நன்றியுடன் நினைவுகூர்கின்றேன்.

மேலும், இம்முறை "தேசிய மீலாத் விழா" நிகழ்வு மன்னார் மாவட்டத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதற்கு இணையாக பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் மேற்கொள்ளப்படவுள்ளதுடன், இந்த வேலைத்திட்டங்களின் பயன்கள் குறித்த ஒரு சமூகத்தினருக்கு மாத்திரமன்றி மன்னார் மாவட்டத்தில் உள்ள அனைத்து சமூகத்தினரினருக்கும் கிடைக்கக் கூடிய வகையில் செயற்படுத்தப்படவுள்ளமை இதன் சிறப்பம்சமாகும் என தெரிவித்துள்ளார்.

மீண்டும் நெருக்கடி நிலை: மத்திய வங்கி ஆளுநரின் அறிவிப்பு

மீண்டும் நெருக்கடி நிலை: மத்திய வங்கி ஆளுநரின் அறிவிப்பு

யாழ்.பல்கலை மருத்துவ பீட மாணவியை காணவில்லை: பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு

யாழ்.பல்கலை மருத்துவ பீட மாணவியை காணவில்லை: பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW


31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அச்சுவேலி, Bondy, France

09 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, London, United Kingdom

01 Oct, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Markham, Canada

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Richmond Hill, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, கொழும்பு

08 Oct, 2018
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம்

09 Oct, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, நந்தாவில்

12 Oct, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், சுழிபுரம், Bobigny, France

21 Sep, 2025
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்புத்துறை மேற்கு, சென்னை, India

23 Sep, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US