சவுதி அரேபியாவின் முக்கிய எண்ணெய் குழாய் விநியோகம் சீரமைப்பு: உலகளாவிய எரிசக்தி தட்டுப்பாடு நீங்கும் என எதிர்பார்ப்பு
இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான போரின் போது நடத்தப்பட்ட தாக்குதல்களால் பாதிக்கப்பட்ட தனது மிக முக்கியமான கிழக்கு - மேற்கு (East-West) எண்ணெய் குழாய் விநியோகத்தை சவுதி அரேபியா மீண்டும் முழு கொள்ளளவிற்கு கொண்டு வந்துள்ளது.
பழுதுபார்க்கும் பணிகளுக்குப் பிறகு, தற்போது இக்குழாய் மூலம் நாளொன்றுக்கு சுமார் 7 மில்லியன் பரல் எண்ணெயை விநியோகிக்க முடியும் என சவுதி எரிசக்தி அமைச்சகம் இன்று அறிவித்தது.
விரைவான மீட்பு நடவடிக்கை
சவுதி அராம்கோ நிறுவனத்தின் இத்தகைய விரைவான மீட்பு நடவடிக்கை, உலகளாவிய எரிசக்தி விநியோகத்தின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்துவதுடன், உலகப் பொருளாதாரத்திற்கும் வலுசேர்ப்பதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அதேபோல், தாக்குதல்களால் பாதிக்கப்பட்டிருந்த மணிபா (Manifa) எண்ணெய் வயல் பகுதியிலும் நாளொன்றுக்கு 300,000 பரல் உற்பத்தி மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.
இருப்பினும், குறைஸ் (Khurais) எண்ணெய் வயல் பகுதியில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளைச் சரிசெய்து உற்பத்தியை மீட்டெடுக்கும் பணிகள் இன்னும் நடைபெற்று வருகின்றன.

மசகு எண்ணெய் கொண்டு சேர்ப்பு
ஈரான் - அமெரிக்கா இடையிலான போர் காரணமாக ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டுள்ள சூழலில், செங்கடல் பகுதியை இணைக்கும் இந்த கிழக்கு - மேற்கு எண்ணெய் குழாய் சர்வதேச சந்தைக்கு மசகு எண்ணெயைக் கொண்டு சேர்ப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறது.
தற்போது இரு நாடுகளுக்கும் இடையே போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ள போதிலும், ஹோர்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்து இன்னும் இயல்பு நிலைக்குத் திரும்பாததால் சவுதியின் இந்த மாற்று விநியோகப் பாதை உலக நாடுகளுக்கு ஒரு பெரும் நிம்மதியை அளித்துள்ளது.
பரபரப்பான 12 மணிநேர பேச்சுவார்த்தை: அடுத்து என்ன நடக்கும்..! பாகிஸ்தானிலிருந்து அவசரமாக வெளியேறும் அமெரிக்கா
தங்கமயில் கர்ப்பமாக இருப்பதை அறியும் பாண்டியன் குடும்பம்.. பரபரப்பான பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் புரோமோ Cineulagam
21 மணி நேர அமைதிப் பேச்சு... ஈரானின் நிலைமை மோசமாகப் போகிறது: எச்சரிக்கும் ஜேடி வேன்ஸ் News Lankasri
விவாகரத்து வழக்கில் ட்விஸ்ட்.. கண்கலங்கி அழுத ரோகிணி.. அதிர்ச்சியில் மனோஜ், விஜயா! சிறகடிக்க ஆசை சீரியல் புரோமோ Cineulagam