ஹவுதிகள் தாக்குதல்: சவூதி அரேபியாவின் மசகு எண்ணெய் விநியோகம் வீழ்ச்சி - 30 ஆண்டுகளுக்கு பின் பெரும் நட்டம்
யெமனின் ஹவுதி அமைப்பினர் மற்றும் ஈரான் ஆதரவு குழுக்கள் நடத்திய தாக்குதல்களைத் தொடர்ந்து, கடந்த ஆகஸ்ட் மாதத்தில் சவூதி அராபியாவின் மசகு எண்ணெய் விநியோகம் நாளொன்றுக்கு 6 மில்லியன் பீப்பாய்களாகக் குறைந்துள்ளதாக சர்வதேச சக்தி முகமையகம்(IEA) தெரிவித்துள்ளது.
இது தொடர்பில், இன்று(11.09.2026) அறிக்கையொன்றும் வெளியிடப்பட்டுள்ளது.
மசகு எண்ணெய் விநியோகம் சரிவு
இது கடந்த மூன்று தசாப்தங்களுக்கும் மேலான காலத்தில் பதிவான மிகக் குறைந்த விநியோக அளவாகும். பாப் எல்-மண்டேப் நீரிணையைக் கடக்கும் கப்பல்கள், சவூதியின் ஜாஸான் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம், யான்பு பகுதிக்கு அருகிலுள்ள கப்பல் போக்குவரத்துப் பாதைகள் மற்றும் ஈராக்கிய ஆதரவுக் குழுக்களால் அப்கைக் எண்ணெய் பதப்படுத்தும் மையம் மீது நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதல்களே இந்த விநியோக வீழ்ச்சிக்கு முதன்மை காரணமாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.

இதன் காரணமாக, 2026 ஆம் ஆண்டிற்கான சவூதி அராபியாவின் சராசரி நாளாந்த மசகு எண்ணெய் விநியோக முன்னறிவிப்பை சர்வதேச சக்தி முகமையகம் நாளொன்றுக்கு 7.6 மில்லியன் பீப்பாய்களாகக் குறைத்துள்ளது.
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உற்பத்தி மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்புவதில் ஏற்பட்டுள்ள தாமதமே இதற்கு முக்கிய காரணம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, ஆகஸ்ட் மாதத்தில் தாம் சந்தைக்கு வழங்கிய மற்றும் உற்பத்தி செய்த எண்ணெயின் அளவு சர்வதேச சக்தி முகமையகத்தின் மதிப்பீட்டை விட அதிகமாக இருந்ததாக சவூதி அரேபியா ஓபெக்(OPEC) அமைப்பிற்குத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாமல் ராஜபக்சவுக்கு தனது குடும்ப பராமரிப்புக்கு கூட பணமில்லையாம்..! சந்தேகத்தை ஏற்படுத்துகிறது மாமனாரின் கருத்து