24 மணி நேரத்திற்குள் வெளியேறுங்கள்! ஈரானிய தூதரக பணியாளர்களுக்கு சவுதி அரேபியா உத்தரவு
ஈரானின் தாக்குதலுக்கு சவுதி அரேபியா வெளியுறவுத்துறை அமைச்சகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
ஈரானின் தாக்குதல் ‘அப்பட்டமான சர்வதேச விதிமீறல்’ என குறிப்பிட்டுள்ள சவுதி அரசு, அண்டை நாடுகளுக்கான கொள்கைகள் மற்றும் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் தீர்மானத்தை ஈரான் மீறியுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளது.
வேண்டப்படாத நபர்கள் அறிவிப்பு
இந்த நிலையில், ஈரான் இராணுவ அதிகாரி மற்றும் 4 தூதரக அதிகாரிகள் 24 மணி நேரத்திற்குள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என சவுதி அரேபியா உத்தரவிட்டுள்ளது.

தங்கள் நிலப்பரப்பின் மீது ஈரான் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதாக குற்றம்சாட்டியுள்ள சவுதி வெளியுறவுத்துறை அமைச்சகம்,ஈரான் தூதரக அதிகாரிகளை ‘வேண்டப்படாத நபர்கள்’ என அறிவித்துள்ளது.
நாட்டின் பாதுகாப்பு, இறையாண்மை மற்றும் தேசிய நலன்களை பாதுகாக்க சவுதி அரேபியா அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்போம் என சவுதி அரேபியா தெரிவித்துள்ளது.
உச்சகட்டத்தில் ஈரான் மற்றும் இஸ்ரேல் போர்! தயார் நிலையில் அவசர சேவைகள் - சுட்டுவீழ்த்தப்படும் ஏவுகணைகள்
இங்கிலாந்தின் கால்பந்தில் அதிக செலவு செய்யும் அணிகள் படுதோல்வி: அதிர்ச்சியில் ரசிகர்கள் News Lankasri